Primary tabs
3.3
இலக்கணம்
இனி, பாலை இலக்கணம், வங்கிய மரபு,
கண்ட மரபு
ஆகியவை பற்றி அறிந்து கொள்வோம்.
பஞ்சமரபில் யாழ் மரபினை அடுத்துப் பாலை இலக்கணம்
கூறப்பட்டுள்ளது. பாலை என்பது பாலை யாழில் பிறக்கும்
ஏழுவகைப் பண்களைக் குறிக்கும். இது 12 வெண்பாக்களால்
இடம் பெற்றுள்ளது. இதில் ஏழிசை பற்றிய செய்திகள்நாற்பெரும்
பண்கள் பற்றிய செய்திகள் முதலிய பல இடம் பெற்றுள்ளன.
ஏழிசைகளாகக் குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி,
விளரி, தாரம் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் எத்தனை
மாத்திரைகள் பெறும் என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
இவ்வேழிசைகளின் ஓசை சில
பறவை, விலங்குகளின்
ஓசைகளுடன் ஒத்திருக்கும் என்கிறது அந்நூல்.
3.3.1 பாலை இலக்கணம்
குரல் -
துத்தம் -
கைக்கிளை -
உழை -
இளி -
விளரி -
தாரை -
சங்கு
குயில்
யானை
மயில்
குதிரை
அன்னம்
காடை
இவ்வேழிசைகள் ஆண், பெண், அலி என்ற நிலையிலும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவே பண்டைய இசைத்தமிழ் மரபுகளாக இருந்துள்ளமையை இதன் மூலம் அறிய முடிகின்றது. வடமொழி இசை நூல்களில் இவை, முறையே ச ரி க ம ப த நி என்றும், சட்சம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்றும் கூறப்பட்டுள்ளன.
- பண் இலக்கணம்
பஞ்சமரபின் யாழ்மரபிலும்,நிருத்த
மரபிலும், வகையொழிபு
மரபிலும் ஆங்காங்கே பண் பற்றிய இலக்கணங்கள்
கூறப்பட்டுள்ளன. 103 பண்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
இப்பண்கள் 103 என்ற நிலையை முதலில் கூறிய இசை
இலக்கணம் பஞ்சமரபு
என்று முனைவர் இ. அங்கயற்கண்ணி
(பஞ்சமரபு கூறும் இசைமரபு ப. 91) குறிப்பிட்டுள்ளார். இவற்றில்
16 பண்கள் மங்கலப் பண்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
இவைபோல அந்தாளிப்படை, அந்தி, மன்றல்,
நேர்திறம்,
வராடி, பெரிய வராடி, சாயரி போன்ற பண்களைப் பற்றிய
குறிப்புகள் உள.
கருவியிசையில் நரம்புக்கருவி, தோற்கருவி, கஞ்சக்கருவி,
துளைக்கருவிகள் உள. இதில் ஒன்று துளைக் கருவியாகும்.
இதில் ஒன்று குழல். இக்குழலை வங்கியம்
என்ற பெயரால்
அழைப்பர். இதன் இலக்கணம் கூறும் பகுதி வங்கிய மரபாகும்.
இப்பகுதியில் வங்கியம் செய்யப் பயன்படும்
மரம், வடிவ
இலக்கணம், துளையளவு இலக்கணம், வங்கியம் இசைக்கும்
முறை, வங்கியத்தில் இசை பிறத்தல் போன்ற செய்திகள் இடம்
பெற்றுள்ளன.
வங்கியம் மூங்கில், சந்தனம், வெண்கலம் ,
செங்காலி,
கருங்காலி ஆகிய ஐந்தாலும் செய்யப்படும். இவ்வைந்தனுள்
மூங்கிலால் செய்வது முதன்மையானதாகும். வங்கியம் என்பது
பொதுவாகக் குழற்கருவிகள் பலவற்றைக் குறிப்பிடும். இது
சிறப்பாக மூங்கிலால் செய்யப்படும் குழற்கருவியைக் குறிக்கும்.
எனவே இக்கருவி ‘புல்’ என்றும் இதனால் புல்லாங்குழல்என்றும் அழைக்கப்படுகிறது. வங்கியம்
செய்வதற்குரிய மரத்தைத்
தேர்ந்தெடுக்கும் பொழுது சில செய்திகளைக் கவனத்திற்
கொள்ள வேண்டும்.
1) உயர்ந்த சமநிலத்தில் பெருக வளர்ந்திருக்க வேண்டும்.
2) காற்றினால் சேதமடையாமல் இருக்க வேண்டும்.
3) முற்றிய பெரிய மரமாக இருத்தல் வேண்டும்.
4) முதுமை இளமை இரண்டும் இல்லாத நடுவயது
நிலையில் இருக்க வேண்டும்.
5) இம்மரங்கள் திருகுகள், பிளத்தல்,
கண்படுதல்,
பொத்துப்படுதல், செய்யாத செய்கை (செயல்படாத நிலை)
ஐந்தும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
6) நிழலில் ஓராண்டுக் காலம் வைத்திருந்து, பின்னர்,
கருவி செய்ய வேண்டும் என்று பஞ்சமரபு கூறுகின்றது.
நரம்பிசை, குழலிசையோடு,
மிடற்றிசை என்று
மூவிசைகளுள் ஒன்றாக இணைத்துக் கூறும் மரபு தமிழருக்கே
உரியது. (இ. அங்கயற்கண்ணி ப.10) மிடற்றைக் கண்டம் என்ற
பெயரால் அழைக்கும் மரபால் இது கண்ட மரபாயிற்று.இதனைச்
சரீரவீணை என்றும் சாரீர
வீணை என்றும் கூறுவர்.
மிடற்றிசை பற்றிப் பஞ்சமரபில் செய்திகள்
உள. இவற்றை
மூன்று பிரிவுகளாக வகுத்துக் காணலாம்.
1) இசை தோன்றுவதற்குக் காரணமான உடற்கூறுகள்.
2) ஆளத்தி இலக்கணம்
3) பிற செய்திகள்
3.3.3 கண்ட மரபு
- உடற்கூறுகள்
உடம்பு மண், நீர், தீ, காற்று, விண் என்ற பஞ்ச பூதங்களால் ஆனதாகும். இவ்வுடம்பில் இடகலை, பிங்கலை, சுழுனை முதலிய பத்து நாடிகள் உள்ளன. அவை போலவே உயிர்வளி, அபானன், வியானன், சமானன் முதலிய பத்து வாயுக்கள் உள்ளன. இவற்றில் பிராணவாயு மூலம் குழற்கருவி இசைக்கப்படுகிறது.
- ஆளத்தி
மிடற்றில்
எழும் ஓசையைத் தொழிற்படுத்தல் ஆளத்தி
என்பர். தற்கால வழக்கில் இதனை ஆலாபனை
என்பர்.ஆளத்தி செய்யப்படும் ஐந்து உயிர்க் குறில் எழுத்துகளும்
நெடில்
எழுத்துகளும் ஐ. ஒள நீங்கலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மெய்யெழுத்துப் பதினெட்டுள் ம, ந, த என்னும் எழுத்துகள்
மிகுதியாகப் பயன்படுத்தப்படும்.
இவ்வகையில் அமையும் ஆளத்தி மூன்று
வகைப்படும்.
1) காட்டாளத்தி
தஅஅ, நஅஅ, தத்தத், தஅஅ,
தநம்தத், தஅஅ என்ற
நிலையில் பாடுவதனைக் காட்டாளத்தி என்பர். தற்காலத்தில்
இதனைத் தானம் பாடுதல் என்பர்.
நிறவாளத்தி என்பது சுரத்தோடு (நிறத்தோடு) பாடுவதாகும்.
நிறம் என்பது சொற்கள் இடம் பெறாத ஓசைத் தொகுதியாகும்.
தற்காலத்தில் இதனை இராக ஆலாபனை என்பர்.
பஞ்சமரபில் பாடுவதற்குரிய இன்னொலிகள்,
பாடுவதற்கு
ஆகாத ஒலிகள், மிடற்றுக்கேற்ற மருந்துகள், மிடற்றுக்கு ஆகாத
மருந்துகள், அரங்குகளில் பாடத்தகுதியுடையவர்,தகுதியில்லாதவர், ஆடலரங்கத்தில்
தொழில் செய்வோருடைய தகுதிகள், யாழ்,
வீணை என்ற கருவிகளின் நல்லியல்புகள்
முதலியன
கூறப்பட்டுள்ளன.
இத்தகு அரிய செய்திகள பஞ்சமரபு என்ற நூல்
மூலமும்,
இந்நூலுக்கு எழுந்த உரை வாயிலாகவும் அறிய முடிகின்றன.
பழமையான நூலாக இருப்பினும், இதன் இசை இலக்கணக்
கருத்துகள் இன்றும் பொருந்தும் நிலையில் அமைந்துள்ளன.
2) நிறவாளத்தி
3) பண்ணாளத்தி
காட்டாளத்தி கமகமான அகாரத்துடன் வரும்.