Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)எழுத்து வருத்தனம் - இலக்கணம் தருக.
வருத்தனம் என்பதற்கு வளருதல் என்பது
பொருளாகும். ஒரு செய்யுளில் பல கருத்துகள் கூறப்
பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து
ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று
கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை
மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து
வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்னும்
சித்திரகவியாகும்.