Primary tabs
-
6.3 சித்திரகவிகளின் வகைகள் - முதற்பகுதி
இப்பகுதியில் கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று,
எழுத்து வருத்தனம், நாக பந்தம் ஆகியவை பற்றிய செய்திகள்
இடம் பெற்றுள்ளன.6.3.1 கோமூத்திரிபசுமாடு ஒன்று சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)
ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்.பின்வரும் பாடலை ஒருமுறை படியுங்கள்.
பருவ மாகவி தோகன மாலையே
பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)- பாடலின் பொருள்
இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.
மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து
கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்
இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த
அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்
உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்
தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.
இப்போது இப்பாடலைச் சித்திரமாக வரைந்து காணப்
போகிறோம்.
(1)
முதல் அடிஇரண்டாம்அடி(2)
முதல் அடிஇரண்டாம்அடி(3)
முதல் அடிஇரண்டாம்
அடிமுதலடியையும், இரண்டாம் அடியையும் இவ்வாறு கோமூத்திரிச்
சித்திரமாக அமைத்துப் பாடுவது இவ்வகைச் சித்திரக்கவியாகும்.
இரு அடிகளிலும் 2, 4, 8,... என்ற இரட்டைப்படை இடங்களில்
இடம் பெறும் எழுத்துகள் ஒன்றாய் அமைத்துப்பாட
இச்சித்திரகவி அமைப்பை எளிதாய்ப் படைக்க இயலும்.6.3.2 கூடச் சதுக்கம்ஒரு செய்யுளின் இறுதி அடியில் இடம் பெறும் எழுத்துகள்
அனைத்தும், முன்னுள்ள அடியில் (அல்லது) அடிகளில் இருந்து
பெறப்படுவனவாகப் பாடப் பெற்றால் அது இவ்வகைச்
சித்திரகவியாகும்.
(கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை
உடையது)
எடுத்துக்காட்டிற்காக, ஒரு திருக்குறளைக் காண்போம்.
2345678910111முகநக/நட்பது/நட்புஅன்று/நெஞ்சத்து
அகநக/நட்பது/நட்பு1234567891011கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து
பெறப்பட்ட எழுத்துகளால் பாடப் பெற்றுள்ளது.6.3.3 மாலைமாற்றுஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் முதல்
இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகத்
தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று
என்னும் சித்திரகவியாகும். (முந்தைய பாடத்தில் கண்ட விகடகவி
போல)எடுத்துக்காட்டு :
பூவாளை நாறுநீ பூமேக லோகமேபூ நீறு நாளைவா பூபாடலின் பொருள் :
தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.
“ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”
இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
பேசுகிறாள்.6.3.4 எழுத்து வருத்தனம்வருத்தனம் என்பதற்கு வளருதல் என்பது பொருளாகும். ஒரு
செய்யுளில் பல கருத்துகள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.
அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது
என்று கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும்
மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம்
(எழுத்து வளர்த்தல்) என்னும் சித்திரகவியாகும்.எடுத்துக்காட்டு :
“மதுரை என்பது ஓர் ஊரின் பெயர்.
அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும்.
அதனோடு ந என்ற எழுத்து
சேர்ந்தால் நமது என்ற உடமைச்
சொல் கிடைக்கும். இவ்வகையில்
கிடைத்த சொற்கள் மதுரை, மது,
நமது என்பனவாகும்.மேலே சில தொடர்கள் உள்ளன. இவற்றுள் மூன்றாவது
தொடரான நமது என்பதில் உள்ள ‘ந’ எழுத்து வருத்தனம்
ஆகும்.
செய்யுள் எடுத்துக்காட்டு:
இதற்கான செய்யுள் எடுத்துக்காட்டு பின்வருமாறு :
ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்.பொருள் :
திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு
காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார்.
அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில்
பிரம்மா இருக்கிறார்.
வ.எண்
செய்யுள் அடி
சொல் வளருதல்
(1)ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்)கம்பு (சங்கு)(2)(கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும்.கம்(3)முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)
(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.)(ந) கம் (மலை)(4)பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.)கநகம்
(பொன்னாடை)(5)மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.)கோகநகம்கம்பு (சங்கு)
(ந) கம் (மலை)
கநகம்
(பொன்னாடை)கோகநகம்
(தாமரை)- எழுத்து வளருதல்
எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை
ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன.
இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக -
எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு
சித்திரகவியாகக் காண முடிகிறது.6.3.5 நாக பந்தம்இது இரண்டு பாம்புகள் இணையும் அமைப்பில்
பாடப்படுவதாகும். இது வெண்பா யாப்பில்
அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக
அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும்
ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும்,
மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு
சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக
இருக்கும் அமைப்பில் பாடுவது இக்கவியாகும்.
எனவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின்
இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ;
பந்தம் = கட்டுதல்)
எடுத்துக்காட்டு :
வெண்பா - 1
அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா
வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள்.- பாடலின் பொருள்
அருளின் திருவுருவாகவும், அம்பலத்தில்
ஆடுபவராகவும், தேவரின் துயர்
தீர்ப்பவராகவும், உமையாளுடன்
இருப்பவராகவும், உறுதிதரும் குன்றாக
இருப்பவராகவும் சிவபெருமான்
விளங்குகிறார்.
வெண்பா - 2
மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருஞ்சோதி - திருவிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி.
- பாடலின் பொருள்
சுடராகவும், நஞ்சை உண்டவரே! என் சித்தம் அயரும்
நிலையை ஒழிக்கஇவை இரண்டும் இணைந்து, நாகபந்தமாக அமைந்த முறையைக் காண்க
- பாடலின் பொருள்