தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (1)
    வினாவுத்தரம் சித்திரகவியை உணர்ந்து கொள்ள ஓர்
    உரைநடைப் பகுதியைத் தருக.


    வினாவுத்தரம் என்பது வினாக்கள் கேட்டு அதன்
    வழியாக ஒரு புதிய இணைப்புச் சொல்லைப் புதிதாகப்
    பெறுவதாகும்.

    வ.எண்
    கேள்வி
    பதில்
    (1)
    செல்வம் என்பதற்கு உரிய
    ஈரெழுத்துச் சொல் யாது?
    திரு
    (2)
    சாப்பிடப் பயனாகும் ; உமி
    தரும் பொருள் யாது?
    நெல்
    (3)
    தோட்டங்களைக்
    காப்பதற்காக இடப் படுவது
    எது?
    வேலி
    (4)
    சிவபெருமான் இருக்கும்
    ஊர் எது?
    திரு+நெல்+வேலி

    அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும். இதுவே
    வினாவுத்தரம் என்னும் சித்திரகவிக்குரிய உரைநடை
    எடுத்துக்காட்டாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:34:23(இந்திய நேரம்)