Primary tabs
-
1.1 காப்பியங்கள் ஐந்து-ஒரு விளக்கம்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,
குண்டலகேசி என்பன ஐந்து பெருங்காப்பியங்கள். இவற்றை
இயற்றியவர்கள் யார் தெரியுமா?நூலின் பெயர்ஆசிரியர்சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்சீவகசிந்தாமணிதிருத்தக்கதேவர்வளையாபதிஆசிரியர் அறியப்படவில்லைகுண்டலகேசிநாதகுத்தனார்இவற்றில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய
மூன்றும் சமண சமயத்தைச் சார்ந்தவை. எஞ்சிய இரண்டும்
பௌத்த சமயத்துக்கு உரியவை. இந்தக் காப்பியங்கள் கதைகளின்
வழியாக மக்களுக்குச் சில நீதிகளைச் சொல்லத் தோன்றியவை.
இவை தோன்றிய காலம் வருமாறு :சிலப்பதிகாரம்கி. பி. இரண்டாம் நூற்றாண்டுமணிமேகலைகி. பி. இரண்டாம் நூற்றாண்டுசீவகசிந்தாமணிகி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுவளையாபதிகி. பி. பத்தாம் நூற்றாண்டுகுண்டலகேசிகி. பி. பத்தாம் நூற்றாண்டுஇந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,
சிந்தாமணி ஆகிய மூன்றும் முழுவதுமாகக் கிடைக்கின்றன.
வளையாபதியில் 72 செய்யுட்களும், குண்டலகேசியில் 224
செய்யுட்களுமே கிடைக்கின்றன.
