தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.0

  • 1.0 பாட முன்னுரை

    துவக்க காலத்தில் நாடோடிக் கூட்டமாகத் (Tribal) திரிந்த
    மனிதன், அடுத்த நிலையில், நிலையான     குடியிருப்புகளை
    அமைத்தான். சமுதாயம் (Feudal Society) உருவாகியது. அதன்
    பின்னர் முடியாட்சி (Monarchy) மலர்ந்தது. முடியாட்சிக்
    காலத்தில் வாழ்ந்த தமிழ்ச்
    சமுதாயத்தின் சிந்தனைகளின்
    வெளிப்பாடே திருவள்ளுவரின் அரசியல் பற்றிய கருத்துகள்.
    இக்கருத்துகளின் வழியாக வீரமும், நட்பும், தமிழர்களின்
    பண்பாட்டுக் கூறுகளாக எவ்வாறு சிறப்புடன் இருந்தன என்பதை
    அறிந்து கொள்ளலாம். முடியாட்சி காலத்தின் செய்திகளாக
    இருந்தாலும், இன்றைய குடியாட்சிக்கும் (Democracy) பொருந்தும்
    வகையில் அவை அமைந்திருப்பது வள்ளுவத்தின் சிறப்பு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)