தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20221l7-1.7 தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை
    நண்பர்களே! இப்போது திருமால் வழிபாடு பற்றிய
    செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
    என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
    மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
    • பழைய தமிழ் இலக்கியங்களான சங்க நூல்களில் திருமால்
      பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், திருமால்
      வழிபாடு மிகத் தொன்மையானது என்று அறிந்து
      இருப்பீர்கள்.
    • திருமால் நெறி ‘வைணவம்’ என்றும், திருமாலை
      வழிபடுவோர் ‘வைணவர்’ என்றும் பெயர் பெற்றதற்கான
      காரணங்களை விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ‘பரிபாடல்’
      என்னும் பழைய நூலில் திருமால் பற்றிய செய்திகள்
      விரிவாக இடம் பெற்றதை அறிந்து இருப்பீர்கள்.
    • வைதிக சமயக்     கலப்பு ஏற்பட்டதற்குப் பிறகு
      திருமாலுக்குரிய வடமொழிப் பெயர்கள் பரிபாடல் போன்ற
      நூல்களில் தமிழ்வடிவம் பெற்றதை அறிந்து இருப்பீர்கள்.
    • சங்க நூல்களில் காணலாகும் ஐவகையான இறைநிலை
      பற்றிய தத்துவக் கருத்துகள், திருமால் பற்றிய அரிய
      செய்திகள் போன்றவைகளால் திருமால் வழிபாட்டின்
      செல்வாக்கை விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.
    • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாலும் திருமால் வழிபாடு
      இடையறாத் தொடர்ச்சியுடையது என்பது உங்களுக்கு
      விளங்கியிருக்கும்.
    1.
    திருமாலின் நிறத்திற்கு எவை உவமையாகக்
    கூறப்படுகின்றன?
    2.
    சங்க நூல்களில் திருமாலை எவ்வாறு
    அழைக்கின்றனர்?
    3.
    ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் திருமால் நெறி
    எத்தகைய சமயக் கட்டமைப்பைப் பெற்றது?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:29:34(இந்திய நேரம்)