தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அலுவலகத் தானியக்கமாக்கத் தேவைகள்

  • பாடம் - 1

    P20321 அலுவலகத் தானியக்கமாக்கத் தேவைகள்
    (Office Automation Requirements)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தாள் கோப்புகள், தட்டச்சு ஆவணங்கள், பேரேட்டுக் கணக்குவைப்புகள், அஞ்சல்வழிக் கடிதப் போக்குவரத்துகள், தாளேட்டுத் தகவல் குவியல்கள் போன்ற மரபு வழிப்பட்ட அலுவலக நடைமுறைகளில் உள்ள பின்னடைவுகளை எடுத்துக் கூறி, அலுவலகப் பணிகளைத் தானியக்க மாக்க வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டி, அதன் பயன்களை விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • தாள் கோப்புகள், தட்டச்சு ஆவணங்களின் குறைபாடுகள்

    • மரபுவழிக் கடிதப் போக்குவரத்து, சுற்றறிக்கைகளுக்கு மாற்றுகள்

    • நிதியியல் கணக்கீடுகளில் வேகமான கணக்கீடு, துல்லியமான கணக்கு வைப்பின் தேவைகள்

    • உடனடித் தானியங்கு கணக்கீட்டின் சாத்தியங்கள்

    • தாளேடுகளில் தகவல் சேமிப்பு, தகவல் மீட்பின் இயலாமைகள்

    • தகவல் தேடலுக்கான புதிய வழிமுறைகள்

    • தாளில்லா அலுவலகமும் ஆளில்லா அலுவலகமும்

    • அலுவலகம் இல்லா அலுவலகம் சாத்தியமா?

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 09:41:00(இந்திய நேரம்)