தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


இந்நூல், பரிபாடல் என்னும் பாவால் தொகுக்கப் பெற்றமையின் இப்பெயர்பெற்றது ; பரிபாட்டெனவும் வழங்கும்; இதனை, எண்வகை வனப்பினுள் இழைபென்பர் பேராசிரியர் (தொல். செய். சூ. 242). பரிபாடலாவது 1இசைப்பாவென்றும் 2பரிந்து வருவதென்றும் கூறப்படும்; பரிந்து வருவது - ஏற்றுவருவது.

அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப்பொருள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல்விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்பர் பேராசிரியர் (தொல். செய். சூ. 121); தெய்வவாழ்த்து உட்படக் காமப்பொருள்குறித்து உலகியலே பற்றிவருமென்பர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். சூ. 53) ; தெய்வமும் காமமும் பொருளாக வருமென்பர் யாப்பருங்கல விருத்தியுடையார் முதலியோர்.

தொல்காப்பியச் செய்யுளியலிலுள்ள, "நெடுவெண்பாட்டே", "பரிபா டல்லே", "கொச்சக மராகம்", "சொற்சீரடியும்", "கட்டுரைவகையான்", "உருட்டுவண்ணம்" என்னும் சூத்திரங்கள் முதலியவற்றாலும் அவற்றின் உரைகளாலும் பரிபாடலின் இலக்கணம் நன்கு விளங்கும் ; "பரிபாட்டெல்லை" என்னும் சூத்திரம், இப்பாடல்களின் சிற்றெல்லை 25-அடி யென்றும் பேரெல்லை 400-அடி யென்றும் தெரிவிக்கின்றது.

"அன்பினைந்திணை" (இறை. சூ. 1) என்பதனுரையிலும், "தரவின்றாகி" (தொல். செய். சூ. 149) என்பதனுரையிலும் 150கலியும் 70பரிபாடலும் என வரையறை


1. இப்புத்தகம் 5-ஆம் பக்கத்துள்ள ‘பரிபாட்டென்பது இசைப்பாவாதலான்' என்பது முதலியவற்றையும், 'கலியும் பரிபாடலும்போலும் இசைப்பாட்டாகிய செந்துறைமார்க்கத்தன' (தொல். செய். சூ. 242, பேர்.) என்பதையும் நோக்குக.

2. 'பரிந்தபாட்டு பரிபாட்டெனவரும்; அஃதாவது ஒருவெண்பாவாகி வருதலின்றிப் பலஉறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது' (தொல். செய். சூ. 112, இளம்.); பரிபாடலென்பது பரிந்து வருவது ; அஃதாவது கலியுறுப்புப் போலாது பல வடிவும் ஏற்று வருவது (தொல். செய். சூ. 118 பேர்.); பரிபாடலென்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப்போலாது நான்கு பாவானும் வந்து பல அடியும் வருமாறு நிற்குமென்றுணர்க' (தொல். செய். சூ. 118, ந.).


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:47:02(இந்திய நேரம்)