பாகரையும் எறிபத்த நாயனார் எறிந்து, விளைந்த
சரிதம் எறிபத்த நாயனார்
புராணத்துட் காண்க.
சிவவேதியர் - 4161. முதற் சைவர்: 4160;
ஆதிசைவ மரபினர்.
சுபதேவன் - 4203. சோழ அரசர்; கோச்செங்கட்
சோழருடைய தந்தையார்.
செங்கோற் பொறையன் - 3757. சேரமானார்க்கு
முன் சேரநாட்டை
அரசாண்டசேரர். இவர் அரசாட்சியை நீத்துத் தவஞ்
சார்ந்தபின் மலை நாட்டுச்
செய்தி முறைமையால் அரசுரிமை பூண்டவர்
சேரமானார்.
செம்பியனார் - 3842. சோழர்.
செருத்துணையார் - 4101. 4104 - 4119;
அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
செழியர் - 3769. பாண்டியர்.
சேரமான் தோழர் - 3813. ஆளுடைய
நம்பிகளுக்குச் சேரமானாருடைய
தொடர்புபற்றி வந்த பெயர்.
சோழநாட்டுப்பதிகள் - [குறியீடு:- தெ.
காவிரித் தென்கரை; வ. காவிரியின்
வடகரை; எண்கள் தலவரிசை எண் குறிப்பன.]
திரு ஆரூர் - 3807. (தெ - 87)
திரு ஆனைக்கா - 4199. (வ - 60)
திரு உறையூர் - 3942. (தெ - வ) இது
மூக்கீச்சுரம் என்னும் பதி.
திரு ஐயாறு - 3878. (வ - 51)
திருக் கண்டியூர் (வீரட்டம்) 3877. (தெ -
12)
திருக் கடவூர் (வீரட்டம்) 4064. (தெ - 47)
காரி நாயனாரது பதி.
திருக் கீழ்வேளூர் - 3831. (தெ -
84)
திருக் கோடிக்குழகர் - 3835. (தெ - 127)
சோழ நாட்டில் காவிரித்
தென்கரையிற் கடைசிப் பதி.
திருச் செருவிலிபுத்தூர் - 4127. இஃது
அரிசிற் கரைப்புத்தூர் என்றும்
வழங்கப்படும். புகழ்த்துணை நாயனாரது பதி. (தெ -
66)
திரு நாகப்பட்டினத் திருநகரம் - 3992. கடனாகை
- 3991; நாகைக்
காரோணம் 3831; அதிபத்த நாயனாரது பதி.
(தெ - 82)
திரு நாட்டியத்தான்குடி - 4134.
கோட்புலியாரது பதி. முன் இப்பெயரால்
வழங்கிய இரயில் நிலையப் பெயர் இப்போது
மாவூர்ரோடு என்று
மாற்றப்பட்டிருக்கிறது. (தெ - 118)
திரு நீடூர் - 4088. முனையடுவார் நாயனாரது
பதி. (வ - 21)
திருத் தில்லைமூதூர் - 3800. சிதம்பரம் -
திருச்சிற்றம்பலம் 3801;
திருப்புலீச்சுரம் 4058; புலியூர்ப் பொன்னம்பலம்
3792; பேரம்பலம் 3801; அநபாயர்
பொன்வேய்ந்த மன்றம். (வ - 1)
திருப் பாதாளேச்சுரம் - 3867. (தெ -
104)
திருப் புகலி - 3808. காழி 3922 -
சீகாழி. (வ - 14)
திரு மறைக்காடு - 3832. (வேதாரணியம்) (தெ
- 125)
ஞான போனகர் - 3808. திருஞானசம்பந்த
நாயனார்; ஆளுடைய பிள்ளையார்
4070; புகலிகாவலர் - 4078;
சண்பையர் கோன் - 4189; உமைஞான
மூட்டவுண்ட எம்பெருமான். காழிநாடன் -
கவுணியர்கோன் - 4224.