தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   253


     

    தொழுகிச்
    சாலி கவினிய கோலச் செறுவிற்
    செல்வங் கொடுத்து நல்குத லறாஅ
    இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற்
    பல்குடித் தொல்லூர் புல்லுபு சூழ
    உயர்மிசை யுலகி னுருகெழு பன்மீன்
    அகவயிற் பொலிந்துத னலங்குகதிர் பரப்பி
    நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக்
    காட்சி யியைந்த மாட்சித் தாகிச்
    சித்திரக் கைவினை செறிந்த கோலத்துப்
    பத்திரப் பாம்புரி யத்தகக் கலாஅய்
    முற்பட வளைஇய பொற்படைப் படுகாற்
    கண்டவர் நடுக்குங் குண்டகழ்ப் பைந்துகில்
    தண்டாச் செல்வமொடு தனக்கணி யாக
    உடுத்துவீற் றிருந்த வடுத்தீ ரல்குல்
    மாற்றோர் நுகரப் படாஅ தேற்ற
    பன்மணி பயின்ற வொண்முகட் டுச்சி
    நலத்தகு ஞாயி லிலக்கண விளமுலைப்
    பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற்
    செறிநிலை யமைந்த சித்திரப் புதவின்
    யாப்புற வமைத்த வாய்ப்புடைப் பணதி
    வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்
    தாய்நலக் கம்மத் தழகொடு புணர்ந்து
    தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும்
    வாயின் மாடத் தாய்நல வணிமுகத்
    தொண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து
    விண்ணிற் செல்லும் விளங்கொளி யவர்களை
    மண்ணிற் செல்வங் காணிய வல்விரைந்
    தடைதர்மி னென்னு மவாவின போல
    வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக்
    கூந்த லணிந்த வேந்துநுதற் சென்னிக்
    கடியெயின் முதுமகள் காவ லாக
    நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங் கறுத்துப்
    பல்வழிக் கூடிய படிய வாகிச்
    செல்வழி யெல்லாஞ் சிறந்த கம்பலை
    கரைபொரு துலாவுந் திரையொலி கடுப்ப
    நிறைவளங் கவினிய மறுகிரு பக்கமும்
    அந்தி வானத் தகடுமுறை யிருந்த
    ஒண்கே

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:53:07(இந்திய நேரம்)