தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   254


     

    ழுடுவி னொளிபெறப் பொலிந்து
    கண்ணுற நிவந்த பண்ணமை படுகாற்
    கைவினை நுனித்த மைதவழ் மாடத்
    தரும்படைச் செல்வ ரமர்ந்தினி துறையும்
    பெரும்படைச் சேரி திருந்தணி யெய்திக்
    கைபுனை வனப்பினோர் பொய்கை யாக
    வாணுதன் மகளிரு மைந்தரு மயங்கிக்
    காம மென்னு மேமப் பெருங்கடற்
    படுதிரைப் பரப்பிற் குடைவன ராடி
    அணிதலும் புனைதலு முனிவில ராகிக்
    காத லுள்ளமொடு கலந்துண் டாடுநர்
    போகச் சேரி புறவித ழாகச்
    சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம்
    பொறைக்கழி கோத்துப் பூண்டன ராகி
    மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
    அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி
    உயர்பெருங் கொற்றவ னுவப்பினுங் காயினும்
    தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
    நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக்
    காரணக் கிளவிப் பூரண நோக்கிற்
    பெருங்கடி யாள ரருங்கடிச் சேரி
    புறவிதழ் மருங்கிற் புல்லி்த ழாக
    மதியுறழ் சங்கின் வாய்வயிற் போந்த
    நிதியம் பெற்ற நீர்மையர் போல
    அதிரா வியற்கை யங்கண் ஞாலத்துக்
    குதிரை மருப்புங் கொளற்கரி தாகிய
    அழலுமிழ் நாக நிழலுமிழ் மணியும்
    சிங்கப் பாலுந் தெண்டிரைப் பௌவத்து
    மூவா வமரர் முயன்றுடன் கொண்ட
    வீயா வமுதமும் வேண்டிற் போய்த்தரும்
    அரும்பெறற் பண்ட மொருங்ககத் தடக்கி
    விட்டன ரிருவா முட்டில் செல்வத்துப்
    பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
    புல்லிதழ் பொருந்திய நல்லித ழாக
    மேன்முறை யியன்ற நான்மறைப் பெருங்கடல்
    வண்டுறை யெல்லை கண்டுகரை போகிப்
    புறப்பொரு ளல்லா வறப்பொரு ணாவின்
    ஒளிகண் கூடிய நளிமதி போல
    ஓத்தொடு புணர்ந்த காப்புடை யொழுக்கின்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:53:19(இந்திய நேரம்)