தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   258


     

    அத்துணை யிருந்தபி னருங்காட் டகவயின்
    மொய்த்தழ லீமத்து முன்னர்க் காட்டிய
    தவாஅ வன்பிற் றவமா சாதனை
    போகிய பொழுதி னாகிய நலத்தொடு
    மேலை யாகிய வடிவின ளாகி
    மற்றவ ளடைவது தெற்றெனத் தெளியெனக்
    கற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர்
    கட்டுரை வகையிற் பட்டுரை யகற்றி
    ஆப்புடை யொழுக்க மறியக் கூறிக்
    காப்பொடு புணரிற் காணலு மெளிதெனக்
    காவல குமரற்கு மேவன வுரைத்து
    விடுத்தவன் போகிய பின்றை மடுத்த
    இருநிலம் புகுதலு மொருவிசும் பிவர்தலும்
    வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும்
    மந்தர மேந்தலு மென்றிவை பிறவும்
    பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்
    கண்டு மறிதுங் கண்கூ டாகச்
    செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்
    கேட்டு மறியலம் வீட்டருஞ் சிறப்பிற்
    புண்ணிய முடைமையி னண்ணின னாமிவன்
    ஒருதலை யாகத் தருதல் வாயென
    உறுதி வேண்டி யுருமண் ணுவாவும்
    மருவிய தோழரு மன்னனைத் தேற்றி
    மாய வொழுக்கமொடு சேயதை நோக்கி
    மிகுதிக் காதன் மகத மன்னனொடு
    சுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக்
    கொற்ற வேந்தன் குறிப்புவழி யோடி
    அகத்துறைந் தொடுங்குதல் செல்லா ரகன்மதிற்
    புறத்தொடுங் கினராற் பொருள்பல புரிந்தென்.
    பொருள்புரி யமைச்சர் பூங்கழற் குருசிலொ
    டிருளறு திருமணி யிராசகிரி யத்துப்
    புறமதி லொடுங்கிய பொழுதின் மறனுவந்
    தமரா மன்ன ரருஞ்சம முருக்கிப்
    பைங்கழ லமைந்த பாடமை நோன்றாள்
    வெண்கதிர் மதியின் வீறொளி திகழ்ந்து
    தான்மீக் கூரிய வேம வெண்குடை
    மணிமுடிச் சென்னி மகத

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:54:08(இந்திய நேரம்)