முகப்பு

1.5 மொழியாசிரியருக்குரிய பண்பு நலன்கள்

மொழியாசிரியருக்குரிய பண்பு நலன்கள்

பண்டைய காலக் கல்வி முறையிலிருந்து தற்காலக் கல்வி முறை மிகவும் மாறுபாடடைந்துள்ளது. ஓர் ஆசிரியராக இருப்பதுடன் மாணவர்களிடம் உடன் பிறந்தவரைப் போல் உறவாடியும், தலைவனைப் போல் வழிகாட்டியும், நண்பரைப் போல் கலந்து வாழ்ந்தும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் மாணவனது உடல் நிலை வளர்ச்சி, மனவளர்ச்சி, சமூக மனப்பான்மை வளர்ச்சி ஆகிய அனைத்து வளர்ச்சிக்கும் பொறுப்பாக உள்ளார். ஆதலால் ஆசிரியரின் பொறுப்பும் கடமையும், பணிச்சுமையும் பன்மடங்கு பெருகியுள்ளன. இந்நிலையில் ஆசிரியராகப் பணியாற்றுவோர் அப்பணிக்குரிய பண்புகளைப் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும்.

ஆசிரியர்களுக்குப் பல பண்புகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் கீழ்க்காணும் சிறப்பு பண்புநலன்களைப் பெற்றிருக்க வேண்டும்.

  • மொழிப்பற்று
  • இலக்கண இலக்கியப் புலமை
  • திறமையாக எழுதும் திறன்
  • உளநூல் வல்லுநர்
  • கலை ஆர்வமிக்கவர்
  • பயிற்றலில் அடிப்படை விதிகளை அறிந்தவராதல்
  • பாடப்பொருள்களைத் தயாரித்தல்
  • பாட முறைகளையறிந்து விழைவுடன் கற்பித்தல்
  • தற்பெருமையும் சினமும் இல்லாதிருத்தல்
  • நகைச்சுவை நாட்டம்
  • மொழியாக்கத் திறனும் - நூல்கள் இயற்றலும்