முகப்பு

அலகு - 5

TT0105 தேர்வும் மதிப்பீடும்

இந்த அலகு என்ன சொல்கிறது?

ஒரு மொழியின் கற்றல் கற்பித்தலின் நிறைவு கால நிகழ்ச்சி தேர்வு ஆகும். இத்தேர்வும், அதன் மதிப்பீடும் கற்றலையும் கற்பித்தலையும் ஊக்குவிக்கிறது. தேர்வினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் நோக்கம், அதன் முக்கியத்துவம், மொழித்தேர்வுகளின் வகைகள், தேர்வில் இடம்பெறும் வினாக்களின் வகைகள், வினாக்கள் தயாரித்துக் தேர்வைத் திட்டமிடும் முறை ஆகியன குறித்து இவ்வலகில் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தேர்வு முறைகளைக் கைக்கொள்ளும் முறை அறியலாம்.
  • தேர்வுகளை வகைப்படுத்தலாம்.
  • வெவ்வேறு தேர்வு வினாக்களை உருவாக்கலாம்.
  • தமிழ்மொழிக்குரிய சிறப்புத் தேர்வு வினாக்களை வடிவமைக்கலாம்.
  • தேர்வு வினாக்களின் பண்புகளை உருவாக்கலாம்.
  • தேர்வு வினாத்தாள் வடிவமைப்பைத் தயாரிக்கலாம்.
  • மாணவர்களின் உணர்வுக்களத்தை மதிப்பிடலாம்.