முகப்பு

அலகு - 4

TT0104 பாடப்பொருளும் கற்பித்தல் அணுகுமுறைகளும்

இந்த அலகு என்ன சொல்கிறது?

கற்பித்தல் என்பது ஒரு வழிமுறை ஆகும். கல்வியின் நோக்கங்களை அடைவதற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் கற்பித்தல் முறை எனப்படுகிறது. பாடங்களை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதே கற்பித்தலின் முக்கிய காரணியாக அமைகிறது. இந்த அலகில் தமிழ்மொழிக்கான கற்பித்தல் முறைகள், கற்பித்தலுக்கான பழகு செயல்களான நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி, உற்று நோக்கல் பயிற்சி, பாடம் கற்பிப்புத் திட்டம் எழுதுதல், அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இக்கால நுட்பவியல் கற்பித்தல் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கற்பித்தல் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
  • கற்பித்தல் பழகு செயல்களில் ஈடுபடும் முறையை அறியலாம்.
  • செய்யுள், உரைநடை, இலக்கணம், கட்டுரை கற்பிக்கும் முறைகளை அறியலாம்.
  • புளூமின் வகைமை நெறிக்கேற்ப வினாக்கள் தயாரித்தல் முறை அறிந்து கொள்ளலாம்.
  • முறையான பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல் முறையை தெரிந்து கொள்ளலாம்.
  • கற்பித்தல் நுட்பத்தை தெரிந்து கொள்ளலாம்.