முகப்பு

அலகு - 1

TT0101 தமிழ் கற்றல் - கற்பித்தல் ஓர் பார்வை

இந்த அலகு என்ன சொல்கிறது?

தம் கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தும் கருவியான ஒலித்தொகுதியே ‘மொழி’ ஆகும். இந்த மொழியைக் கற்பிப்பதற்கு அதன் தோற்றம், வளர்ச்சி குறித்து அறிந்திருப்பது முதன்மையானதாகும். மொழிகளில் தொன்மையான தமிழ்மொழியைக் கற்பிப்பதற்குரிய மொழியின் பன்முக வளர்ச்சி, தமிழ்மொழியை வகுப்பறைச் சூழலில் கையாளும் திறன் மற்றும் மொழிக்குரிய பண்புநலன் குறித்து விளக்குவதே இந்த அலகின் நோக்கமாகும்.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கலைத்திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • தமிழ்மொழி கலைத்திட்டத்தில் பெறுமிடம் குறித்து அறியலாம்.
  • மொழியின் பன்முக வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.
  • இரண்டாம் மொழியாக தமிழ்க் கற்றலை ஊக்குவிக்கலாம்.
  • தமிழ் மொழியை வகுப்பறைச் சூழலில் கையாளுதலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • மொழி ஆசிரியருக்குரிய பண்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.