முகப்பு

1.6 தொகுப்புரை

தொகுப்புரை

தமிழ்மொழி கற்பித்தல் என்ற இவ்வலகில் கலைத்திட்டத்தில் தமிழ்மொழி பெறுமிடம், மொழியின் பன்முக வளர்ச்சி நிலை, இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்பித்தல், வகுப்பறைச் சூழலில் மொழியைக் கையாளும் முறை, நல்ல மொழியாசிரியருக்குரிய பண்புநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இதனால் பயிற்சி ஆசிரியர் பயனடைவர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. மொழி கற்பித்தலின் படிநிலைகள் யாவை?
  2. இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்றலில் ஏற்படும் இடர்பாடுகள் யாவை?
  3. இரண்டாம் மொழி கற்றலை மேம்படுத்தும் முறைகள் குறித்து எழுதுக.
  4. வகுப்பறையில் மொழியைக் கையாளும்போது கவனிக்க வேண்டிய கூறுகள் யாவை?
  5. அடிப்படைத் திறன்களைக் கையாளும் முறைகள் குறித்து எழுதுக.
  6. மொழியாசிரியர் பெற்றிருக்க வேண்டிய சிறப்பு பண்புகள் யாவை?