முகப்பு

அலகு - 3

TT0103 மொழியின் அடிப்படைத்திறன்கள்

இந்த அலகு என்ன சொல்கிறது?

மொழியைக் கற்பதற்கான முதல்படி அடிப்படைத் திறன்களைப் பெறுதல் ஆகும். இவ்வடிப்படைத் திறன்களைக் கற்கும் பொழுது தம் எண்ணங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியதைத் தம்முள்ளும் பிறருள்ளும் பதிப்பதற்கும் பயனுடையுள்ளதாக உள்ளது. அவ்வடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களையும், இத்துடன் மொழிபெயர்த்தலையும் மொழியாக்கத்தையும் மாணவர்களிடம் வளர்ப்பது குறித்து இவ்வலகு எடுத்துரைக்கின்றது.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கேட்டல் திறன் வளர்க்கலாம்.
  • பேசுதல் திறனை உண்டாக்கலாம்.
  • படித்தல் திறனுக்குப் பயிற்சி அளிக்கலாம்.
  • எழுதுதல் திறனைப் பழகலாம்.
  • படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.
  • மொழிபெயர்த்தல் மற்றும் மொழியாக்கத் திறனை வளர்க்கலாம்.