முகப்பு

4.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

தாய்மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அறிவை வளர்க்கும் செயலுக்கு அடிப்படையாகும். மொழி வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புடையன. ஒரு குழந்தை பள்ளிக்கு வருவதன் நோக்கம் மொழியையும் அறிவையும் வளர்ப்பதற்கே ஆகும். தாய்மொழியாகிய தமிழ் கற்பதற்கு இனிமையானது, எளிமையானது என்றாலும் அதனைக் கற்கும் முறையறிந்து கற்றால்தான் எளிமையாகக் கற்க முடியும். அதனைக் கற்பிப்பதற்குச் சிறந்த ஆசிரியர்கள் இருந்தாலும் அதனைக் கற்றுக் கொடுக்கும் முறையின் மூலம்தான் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த முடியும். பிறநாட்டு கல்வியாளர்களும் இந்தியக் கல்வியாளர்களும் தங்களின் அரிய முயற்சியில் கற்பித்தல் துறையில், குறிப்பாக மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தனர். அவ்வாறு புதிதாகத் தோன்றிய கற்றல் கற்பித்தல் முறைகள், பழகு செயல்கள், மொழி வடிவங்கள், வினாக்களைத் தயாரித்தல், பாடம் கற்பிக்கும் திட்டம் உருவாக்கல் போன்றவற்றை இவ்வலகின்வழி தரப்படுகின்றன.