தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
4.6 தொகுப்புரை
தொகுப்புரை
இவ்வலகில் கற்பித்தல், கற்பித்தல் முறைகள், பழகு செயல்கள், மொழி வடிவங்கள், புளூமின் வகைமை நெறி, பாடம் கற்பிப்புத் திட்டம், தமிழ் கற்பித்தலில் நுட்பவியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் பழகு செயல்களாக நுண்நிலைக் கற்பித்தல், உற்று நோக்கல், வகுப்பறைக் கற்றல் ஆகியன நோக்கப்பட்டுள்ளன. தமிழ் கற்பிப்பதற்குரிய பல்வேறு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. செய்யுள், உரைநடை, இலக்கணம், கட்டுரை போன்றவற்றைக் கற்பிப்பதற்குரிய வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. புளூமின் வகைமை நெறியைக் கொண்டு அறிவுக்களமும் பாடம் கற்பிப்புத் திட்டமும் கொடுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் பயன்படுத்துகின்ற நுட்பவியல் வகைப்பாடுகள் கற்பித்தலுக்குத் துணைக்கருவிகளாக அமைந்துள்ளன.