தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
5.6 தொகுப்புரை
தொகுப்புரை
இந்த அலகில் தேர்வு முறைகள், தேர்வு வகைகள், வினாக்களின் வகைகள், சிறப்புத் தேர்வு வினாக்கள், வினாத்தாள் திட்ட வரைவு, உணர்வுக் களத்தை மதிப்பிடுதல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. மூன்று வகையான தேர்வு முறைகளும் வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அகவயம், புறவயம் பற்றிய வினாக்களும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மொழிப்பாடங்களுக்கான எடுத்துக்காட்டுச் சிறப்புத் தேர்வு வினாக்கள் உள்ளன. வினாத்தாள் தயாரிப்பதற்கான வரைவுப் படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறைவாக மாணவர்களின் உணர்வாற்றலை வெளிகொணர்வதற்கான செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல, மாணவர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.