முகப்பு

5.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

சோதித்தல், தேர்விடல் ஆகிய சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இது கற்பித்தலின் நிறைவுச் செயலாகும். தேர்வின் வாயிலாகக் கற்றலும் கற்பித்தலும் மதிப்பிடப்படுகின்றன. தேர்வு மேற்கொள்ளுதல், மதிப்பீடு என்னும் சொல்லாலும் குறிக்கப்படுகிறது. மதிப்பிடுதலுக்குத் தேர்வு இன்றியமையாத அணுகுமுறையாகும். இவ்வலகில் தேர்வினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் நோக்கம், அதன் முக்கியத்துவம், மொழித்தேர்வுகளின் வகைகள், தேர்வில் இடம்பெறும் வினாக்களின் வகைகள், வினாக்கள் தயாரித்துக் தேர்வைத் திட்டமிடும் முறை ஆகியன விளக்கப்படுகின்றன. மதிப்பிடலானது கற்பித்தல் - கற்றல் செயல்முறையில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. கற்றலின் நோக்கங்களை உருவாக்கவும், கற்றல் அனுபவங்களை வடிவமைக்கவும், கற்றோர் செயல்பாட்டைத் தரமிடவும் மதிப்பிடவும் உதவுகிறது. இத்துடன், கற்பித்தலில், கலைத்திட்டத்தில் மேம்பாடு கொண்டு வரவும் இது பயன்படுகின்றது. வெவ்வேறு நோக்கங்களைக் கல்வியில் மதிப்பிடுதல் கொண்டிருந்தாலும் மதிப்பிடுதலின் முக்கிய நோக்கம் வழங்கப்படும் கருத்தின் தரத்தையும், பாடத்திட்டம், கலைத்திட்டம், கல்வி நோக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதாக அமைகிறது.