அ) மக்கட்செல்வம் | - | மக்கள் + செல்வம் |
ஆ) பிணியின்மை | - | பிணி + இன்மை |
இ) குலனுடைமை | - | குலன் + உடைமை |
5.3 மொழிப்பாடங்களுக்கான சிறப்புத் தேர்வு வினாக்கள்
மொழிப்பாடங்களுக்கான சிறப்புத் தேர்வு வினாக்கள்
வினாக்கள் பலவகைப்படினும் தமிழ் மொழிக்கெனச் சிறப்பான தேர்வு வினாக்கள் உள்ளன. ஏனெனில் பிற பாடங்களைப் போல் இல்லாமல் சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்த மொழிப்பாடம் மிகவும் பொருத்தமாகிறது.
நடைமுறைப் பாடத்திட்டத்தின் மொழிக்கூறுகளான சொல், தொடர், வாக்கியங்கள் முதலியனவற்றை எடுத்தாளும் திறன்களும் சோதிக்கப்படுகின்றன. இத்திறன்களைப் பற்றிய பாடப்பகுதி இலக்கணமும் மொழித்திறனும் என்னும் தலைப்பில் பாடநூல்களில் காணப்படுகின்றன. இதில் ‘சொல் உருவாக்கம்’ ‘பிரித்து எழுதுதல்’ ‘தொடர்ப் பிழையறிதல்’ ‘வாக்கிய மாற்றம்’, ‘இலக்கண விதிகள்’ முதலிய சோதனை வகைகள் காணப்படுகின்றன.
கீழ் உள்ள பயிற்சி சொல் உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டது.
1. கல் | 2. …………………….. |
3. …………………….. | 4. …………………….. |
5. …………………….. |
இது முதல் வகுப்பிற்கான சொல் உருவாக்கச் சோதனையாகும். இச்சோதனையில் எழுத்துக்களை இணைத்துச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. சொற்களை உருவாக்கக் கவர்ச்சியான பிற முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சேர்த்து எழுதும் சோதனையும், பிரித்து எழுதும் சோதனையும் புணர்ச்சிவிதிகளை மையமாகக் கொண்டது.
அ) எண் + என்ப | = | என்னென்ப |
ஆ) கண் + உடையார் | = | கண்ணுடையார் |
நான் அவனை -- கண்டேன் (க்)
நான் பள்ளிக்கு -- சென்றேன் (ச்)
நான் பூவை -- தொடுத்தேன் (த்)
அவன் கடைக்கு -- போனான் (ப்)
மேற்கண்ட வாக்கியங்களில் க், ச், த், ப் ஆகிய மெய்யொற்றுகள் அவற்றுக்கு இனமாக பொருந்துவதாக எழுதுக.
மொழியறிவுத்தேர்வு வினாக்கள் முதன்மையாகக் கருதப்படுவது வாக்கியங்களை எடுத்தாளும் முறையைக் கணிக்கின்றன. வாக்கிய வகைகள், வாக்கியத்தின் அமைப்பு முதலியன வாக்கிய மாற்றுத் தேர்வாகக் கருதப்படுகின்றன.
வாக்கிய மாற்றச் தேர்வுகளில் எழுவாய், பயனிலை இயைபு, ஒருமை, பன்மைகளை முறையாகப் பயன்படுத்துதல் முதலியன கவனிக்கப்படுகின்றன.
தமிழ் மொழியை முறையாகப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அமைக்கப்படும் விதி முறைகள் இலக்கண விதிகள் ஆகும்.
இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கண கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்றுகொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பாகும். தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்திலக்கண வகைகள் உள்ளன. அவற்றை முறையே கற்றால் உலக அளவில் தமிழ் மொழியைத் தழைத்தோங்க செய்யலாம்.
ஒருமை | பன்மை |
---|---|
மான் | மான்கள் |
குடை | குடைகள் |
பந்து | பந்துகள் |
வீடு | வீடுகள் |
அணில் | அணில்கள் |