முகப்பு

3.6 தொகுப்புரை

தொகுப்புரை

ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சமுதாயச்சூழல், அரசியல் போக்கு, இயற்கை வளம், மக்களின் மனநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்கின்ற படைப்பாளிகள் இலக்கியங்களைப் படைக்கின்றனர். இலக்கியங்கள் பயிலுந்தோறும் புதுப்புதுச் சுவைகளையும், கருத்துகளையும் வழங்குவதை நாம் அறிவோம். தொடக்க நிலையில் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க முற்படும்போது எளிய முறைகளைக் கையாள வேண்டும். படங்களின் மூலம் படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாட்டை அளிக்கையில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதைக் காண இயலும். சூழலுக்கேற்ற கற்பனை வெளிப்பாடு என்பது நமக்குப் புதிதன்று. அதற்கு நம் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. மொழி விளையாட்டுகளும் குறுக்கெழுத்துப் புதிர்களும் மாணவர்களைக் கற்றலில் மட்டுமன்று, படைப்பாற்றலிலும் ஈடுபடுத்தக் கூடியவை. மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை கையெழுத்து இதழாக உருவாக்கச் செய்யலாம். மேலும், விளம்பரம், அறிவிப்பு, முழக்கத் தொடர்கள் ஆகியவற்றை உருவாக்கச் செய்தல் என்பது படைப்பாற்றலுக்கான அடுத்த நிலைக்கு மாணவர்களைக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. ’தமிழ் மொழி’ சார்ந்த தலைப்பில் குறுக்கெழுத்துப் போட்டினை உருவாக்குக.
  2. கையெழுத்து இதழில் இடம் பெறவேண்டிய சில தகவல்களைக் கூறுக.
  3. கீழ்க்கண்ட பொருள்களுக்கு விளம்பர பலகை உருவாக்குக.
    அ) சோப்பு ஆ) துணிக் கடை இ) பல் மருத்துவமனை