அலகு - 3
படைப்பாற்றலை வளர்க்கும் வழிமுறைகள்
இந்த அலகு என்ன சொல்கிறது?
மாணவர்கள் படங்களின் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், கற்பனையை வெளிப்படுத்தவும், மொழிவழி விளையாடி படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இவ்வலகில் கூறப்பட்டுள்ளன. கையெழுத்து இதழ், விளம்பரம், அறிவிப்பு ஆகியவற்றை படைப்பாற்றலின்வழி மாணவர்கள் உருவாக்க கற்றுக்கொள்ள இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- படத்தின் வாயிலாகப் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்
- சூழல்நிலைக்கேற்ற கற்பனையை வெளிப்படுத்தலாம்.
- மொழிவழி விளையாட்டையும் குறுக்கெழுத்து புதிரையும் உருவாக்க கற்றுக்கொள்ளலாம்.
- கையெழுத்து இதழ் உருவாக்கலாம்.
- விளம்பரம், அறிவிப்பு, முத்திரைத் தொடர்களை உருவாக்கலாம்.