அலகு - 1
படைப்பாற்றல் – ஓர் உயர்நிலைத்திறன்
இந்த அலகு என்ன சொல்கிறது?
படைப்பாற்றலை வளர்ப்பதன்மூலம் குழந்தைகள் சமூகத்தில் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்க முடியும் எனவும் அவ்வாறு விளங்க குழந்தைகளை ஆசிரியர் எவ்வாறெல்லாம் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- உயர்நிலைப் படைபாற்றல் திறனை அறிந்துகொள்ளலாம்.
- குழந்தையின் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.
- படைப்பாற்றலை ஊக்குவிக்கும் காரணிகளை உணர்ந்து கொள்ளலாம்.
- படைப்பாளரைக் கண்டுபிடித்து திறமையை வெளிக்கொணர முடியும்.
- மாணவர்களின் படைப்பாற்றலின் உத்திகளை உணர முடியும்.
- மொழிசார்ந்த படைப்பாற்றலை வளர்த்து கொள்ள முடியும்.