1.5 படைப்பாற்றல் கல்வி
படைப்பாற்றல் கல்வி
மாணவர்கள் தாமாகவே கற்றல் செயல்பாட்டில் மனவரைப்படம் மூலமாக தன் மனத்தில் பதிய வைத்ததை மிக எளிமையானமுறையில் எடுத்துரைப்பதே படைப்பாற்றல் கல்வி எனப்படும்.
படைப்பாற்றல் பற்றி நான்கு வகையான உளவியல் கோட்பாடுகள் உள்ளன. அவை,
- நுண்ணறிவின் சிறப்பான நிலை
- சிறப்பான உளநலம்
- ஆதிக்கப் போக்கின் எதிர்ப்பு
- குழந்தைகளிடம் பெற்றோர்களின் மனப்பான்மை
கில்போர்ட்டின் கருத்துப்படி, படைப்பாற்றலுக்குத் துணை செய்யக்கூடிய பல்வேறு கூறுகள் நுண்ணறிவின் அமைப்பில் சிறப்பாகக் காணப்படுவதே ஒருவனிடம் இத்திறன் மிகுந்து காணப்படுவதற்கு அடிப்படை என்பதாகும்.
சிறப்பான உளநலம் (Mental Health) உள்ளவர்களிடம் படைப்பாற்றல் மிகுந்திருக்கும் என்பது மற்றொரு கருத்தாகும். உளநலம் உடையவர்களது உள்ளம் திறம்படச் செயலாற்றவல்லது. தன் முழு ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதில் உள்ள ஆர்வம் (Self Actualization), தன்னைப் பற்றிய ஆக்க முறையில் அமையும் தற்கருத்து (Self Concept) பெற்றிருத்தல், மிகுதியான தன்மதிப்பு (Ego Strength) போன்ற பண்புகள் உளநலம் மிகுந்தவனிடம் மிகுதியாகவே காணப்படும். இது படைப்பாற்றலைத் தோற்றுவிக்கும் எனப்படுகிறது.
ஆதிக்கப்போக்கு காணப்பட்டால் அதற்கு எதிர்ப்பாக, ஆக்கத்திறன் வெளிப்படும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
உளப்பகுப்புக் கோட்பாட்டினர் குழந்தைகளிடம் தந்தை, தாய் ஆகியோர் கொண்டுள்ள மனப்பான்மையின் விளைவாக ஆக்கத்திறன் மிகுந்த நிலையோ, குறைந்த நிலையோ எழக்கூடும் என்பர். இக்கருத்து ஓரளவு சிக்கலானது.
புதியனவற்றைக் கண்டுப்பிடித்தலுக்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாகக் கிரகாம் வாலஸ் என்ற உளவியல் வல்லுநர் தெரிவித்துள்ளார். அவை,
- ஆயத்தம் (Preparation)
- உள்வளர்ச்சி (Incubation)
- விளக்கம் தோன்றல் ( Illumination)
- சரிபார்த்தல் (Verification)
முதலில் சிக்கலைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு அச்சிக்கலை வரையறை செய்தல், ஒருமுகப்படுத்துதல், அதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்தல், பகுத்தாய்தல், இவற்றின்மூலம் தீர்வுகாண தன்னைத்தானே உளரீதியாக ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நிலையாகும்.
சிக்கல்களைத் தீர்ப்பதற்கான செயல்முறைகளை வெளிப்படுத்தாமல், முன் அனுபவத்தையும் பெறப்பட்ட தகவல்களையும் புதிய கோணத்தில் இணைத்துச் சிந்தித்தலைக் குறிப்பதாகும். நம்மை அறியாமல் ஏற்படும் உள் வளர்ச்சியின் காரணமாக சில நேரங்களில் உடனடியாகத் தீர்வு தோன்றிவிடும். இதனையே உள் வளர்ச்சி என்று கூறுகின்றோம்.
சிக்கலுக்கான விளக்கம் சில நேரங்களில் மனத்தில் திடீரென உள்ளொளி போலத்தென்படும். எடுத்துக்காட்டாக, கணிதமேதை இராமானுஜம் தன் கனவில் பல கணித உண்மைகள் பளிச்சிட்டதைக் குறிப்பிடுகின்றார். ஆக்கச் சிந்தனையாளர்கள் பெரும்பாலோர் அவர்களுடைய கருத்துக்கள் திடீரெனத் தோன்றுவதாகவும் அது ஒரு உள்ளுணர்வாகப் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சிந்தித்து அறிந்த தீர்வின் தன்மை சரிபார்க்கப்படுகிறது. உள் வளர்ச்சி, உள்ளொளி தோன்றல் இவ்விரண்டு நிலைகளும் அறிவியல் ஆக்கச்சிந்தனைக்கும், கலையழகு ஆக்கச்சிந்தனைக்கும் பொதுவாகக் காணப்படுகின்றன.
படைப்பாற்றல் கீழ்க்காணும் இயல்புகளைக் கொண்டதாக அமையும் என்று உளவியலாளர்கள் பட்டிலிட்டுக் கூறுகின்றனர்
- ஒரு செயல்முறையைக் கொண்டது
- தனிச்சிறப்புடைய கற்பனையால் விளைவது
- தனித்துவமானது
- விரிசிந்தனையுடன் தொடர்புடையது
- புதுமைகளின் விளைவுகளுக்கு வழிவகுக்கக் கூடியது
- சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது
- நுண்ணறிவுடன் கட்டாயத் தொடர்பற்றது
- மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமானது
அறிவியல் அறிஞர் எடிசனை நாம் அறிந்திருப்போம். அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி கூறப்படுவது உண்டு. ஓர் இயந்திரம் இயங்காமல் போகவே, அதனைச் சரிசெய்ய எடிசனின் உதவியை நாடினர். எடிசன், ஒரு சில நிமிடங்கள் இயந்திரத்தைச் சுற்றிப் பார்த்தார். பிறகு ஒரு சிறு சுத்தியலை எடுத்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தை ஓங்கித் தட்டினார். உடனே இயந்திரம் இயங்கத் தொடங்கியது. இதற்காக 100 காசுகள் கேட்டார் எடிசன். இதனைக் கேட்ட இயந்திரத்தின் உரிமையாளர், ’ஓர் அடி அடித்தற்காகவா 100 காசுகள்’ என்றாராம். அதற்கு எடிசன், ’அடித்ததற்கு 1 காசுதான்; ஆனால் எங்கு அடிக்க வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுத்தற்கு 99 காசுகள்’ என்றாராம். இந்நிகழ்வில் ஆக்கத்திறனின் வெளிப்பாட்டை நாம் காணலாம்.
படைப்பாற்றலின் பண்புகளை உளவியல் அறிஞர்கள் பலர் ஆராய்ந்து பல நிலைகளில் கூறியுள்ளனர். “திறந்த மனத்துடன்(Openness) சிந்தித்தல்” ஆக்கத்திறனுக்கு ஆதாரம் என்பது ரோஜர்ஸ் (Rogers) என்பாரது கருத்தாகும். கில்பர்ட் அவர்கள் “விரிசிந்தனையை” (Divergent thinking) படைப்பாற்றலின் கருவாகக் குறிப்பிடுகிறார். ஏனெனில் ஒரு சிக்கலை நன்கு ஆராய்ந்து, அதன் பல்வேறு பரிமாணங்களையும் சிந்தித்து ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுமுறைகளைச் சிந்திப்பது விரிசிந்தனையாகும். இது படைப்பாற்றலுக்கு அடிப்படையாக உள்ளது. கில்பர்ட்டின் கருத்துப்படி,
- சிக்கல்கள் பற்றிய நுண்ணுணர்வு (Sensitivity to Problems)
- சிந்தனையில் நெகிழ்ச்சி (Flexibility in thinking)
- தனித்தன்மையுடன் சிந்தித்தல் (Originality in thinking)
- அகக்காட்சி அல்லது உட்காட்சித் தாவல் (Intuitive leap)
- பொருளறிவினைத் தேவையெழும்போது எளிதாக மீட்டுக்கொணரும் திறன் (facility of information retrieval)
- பெற்றுள்ள பொருளறிவினை மேலும் விரிவுபடுத்தி வளர்த்தல் அல்லது முழுமையாக்குதல் (Elaboration abilities)
- பொருளறிவின் எவ்விவரம் தேவையென அறிந்து மதிப்பிடும்திறன் (Evaluative abilities)
போன்ற கூறுகள் ஆக்கத்திறனுள் அடங்கும்.
படைப்பாற்றல் அல்லது ஆக்கத்திறன் என்பது புதிய கருத்துக்களை, கருத்துருக்களை, பொருள்களை உருவாக்கக் கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. படைப்பாற்றலை ஏதுவாக்குவதில் சமூகச் சூழலுக்கும் முக்கியப் பங்கு உண்டு எனலாம். பொதுவாகப் படைப்பாற்றல் கலைகளுடனும் இலக்கியத்துடனும் இணைத்துப் பார்க்கப்பட்டாலும் பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, நகைச்சுவை, வணிகம் என பல துறைகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. படைப்பாற்றல் சிலருக்கு இயல்பாக அமைந்தாலும், பெரும்பான்மையானோர் இதைப் படிப்பறிவாலும் பட்டறிவாலும் பெறுகின்றனர். இவ்வாறு வெளிப்படும் படைப்பாற்றலை,
- மொழி சார்ந்த படைப்புகள்
- மொழி சாராத பிற படைப்புகள்
- புதியதாக ஒன்றனை உருவாக்குவது
- ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்குவது (அ) வடிவம் மாற்றுவது
- இத்தகையோர், பிறர் கூறுவதைக் கேட்பது, நிகழ்ச்சிகளை உற்றுநோக்குவது, செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருப்பர்.
- உற்சாகத்துடனும் வலுவுடனும் இவர்கள் செயலாற்றுவார்கள்; படிப்பது, எழுதுவது, ஓவியம் வரைவது போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவார்கள்; இவர்களது பேச்சில் உவமைகள் மிகுந்திருக்கும்.
- பிறர் கூறுவதை இவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. எந்தச் சிக்கலையும் பல கோணங்களில் அலசிஆராயும் போக்கு இவர்களிடம் பெருமளவு காணப்படும்.
- ஆக்கத்திறன்மிக்கோர் தெளிவாகவும் வேகமாகவும் பேசக்கூடியவர்கள். இவர்களது பேச்சில் கருத்துகள் தங்கு தடையின்றி வேகமாக வெளிப்படும். தொடர்பற்ற கருத்துக்கள் எனத் தோன்றும் கருத்துகளையும் தொடர்புப்படுத்திக் காட்டக்கூடிய திறமை இவர்களது பேச்சில் வெளிப்படும்.
- இத்தகையோர் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய சூழ்நிலையில் சிறப்பாகச் செயற்படுவர். ஆனால், கட்டுப்பாடுகளும் தடைகளும் மிகுந்துள்ள சூழ்நிலை இவர்களது ஆக்கத்திறன் வெளிப்படுவதற்குப் பெரும் தடையாக அமையும்.
- முன்பே கூறியபடி, இவர்களது சிந்தனையின் போக்கு புதிய முடிவுகளைத் தரக்கூடிய விரிசிந்தனையாக அமையும். ஆக்கத்திறன்மிக்கோர் ஏதாகிலும் ஒன்றனைப் பற்றிச் சிந்தித்தபடி இருப்பர். இத்தகைய சிந்தனையிலே மூழ்கி இருப்பதும் அவர்களது ஆளுமைப் பண்பாகும்.
- ஒரு சிக்கலுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் அவற்றை விடுவதில்லை. வேறு தீர்வுகள் உள்ளனவா எனச் சிந்தித்துக்கொண்டே இருப்பர். இந்நிலை பிறரால் நகைப்புக்கு உள்ளாகும் நிலையையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் அவ்விளைவுகளை மேலும் ஆராயத் தொடங்குவர்.
- ஆக்கத்திறன் மிக்கோர் தங்களது உணர்ச்சிகளை மூடி மறைக்காமல் வெளிப்படையாகக் காட்டும் பண்புள்ளவர்கள். இப்பண்பு உள்ளவர் ஆக்கத்திறன் மிகுந்தவராக இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பிடுவனவாம் என்று ஆக்கத்திறன் பற்றிப் பல ஆராய்ச்சிகள் செய்த டாரென்சு (Torrence) என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- ஆராய்ந்து அறியும் திறனை வளர்த்துக் கொள்வர்
- சிக்கலுக்குத் தீர்வு காண்பர்
- தானே செய்து பார்த்துப் புரிந்து கொள்வர்
- கற்றலுக்கான பொருள்களைத் திரட்டும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வர்
- கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வர்
- புதிய கோணத்தில் வினா எழுப்புவர்
- கருத்துகளைத் தொகுத்தறிவர்
- புதிய சூழலைப் பயன்படுத்துவர்
- கற்கும் முயற்சியை மேற்கொள்ளும் திறன் பெறுவர்
- கற்றலில் இயற்கையான ஆர்வத்தைப் பெறுவர்
- கற்றலுக்கான வழிமுறைகளை வகுப்பர்
- கற்றலுக்கான ஆயத்தத்தை ஏற்படுத்திக்கொள்வர்
- அனுபவங்கள் மூலம் கற்பர்
- பகுத்தறியும் மனப்பான்மை வளர்த்துக் கொள்வர்
- கருத்துக்களைப் புரிந்து கொள்வர்
- சுய மதிப்பீடு செய்வர்
என்ற இரண்டு நிலையில் வகைப்படுத்தலாம்.
படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் தங்கள் சிந்தனையில், அனுபவத்தில், கற்பனையில் உருவாகும் ஒன்றனை மொழியின் உதவியுடன் வெளிப்படுத்த முயலுவர். அவ்வாறு வெளிப்படுத்துவதை இருநிலைகளில் நாம் காணலாம்.
புதியதாக ஒன்றனை உருவாக்குவது என்பது, ஒருவர்க்கு ஏற்படும் சிந்தனை ஆற்றலின் விளைவாகப் பாடல், கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை உருவாக்குவதைக் கூறலாம்.
ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்குவது (அ) வடிவம் மாற்றுவது என்பது ஏற்கனவே ஒரு வடிவத்தில் உள்ள படைப்பை வேறு ஒரு வடிவத்தில் மாற்றுவதாகும். எடுத்துக்காட்டாக, செய்தியை உரையாடலாக்குதல், உரையாடலை கட்டுரையாக்குதல் போன்றவையாகும்.
படைப்பாளிகள் தங்கள் படைப்பாற்றலை இசை, நடனம், ஓவியம், சிற்பம், கட்டடம் போன்ற நுண்கலையாக வெளிப்படுத்துவர். அல்லது சமூகத் தேவைகளுக்கு ஏற்பவோ சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கிலோ புதிய தொழில்நுட்பக் கருவிகள், கோட்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவர். இவை மொழி சாராத படைப்புகளாகும்.
படைப்பாற்றலுக்குப் பல தடைகளும் இருக்கின்றன. அவையாவன:
தன்னுள் எழும் படைப்பாக்கச் சிந்தனையை யாரேனும் விமர்சிக்கக் கூடும் என்ற மனப்பான்மை பலரிடம் உள்ளது. இம்மனநிலை அவர்களின் படைப்பாற்றல் திறனைத் தடுக்கும் முதல் காரணியாகும்.
‘உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே‘ என்பார் திருமூலர். உடல் நலம் உயிரைக் காப்பது மட்டுமின்றி மனநலத்துடனும் தொடர்புடையதாகும். உடலமின்மை படைப்பாற்றலைத் தடுக்கும் காரணியாக விளங்குகிறது.
தற்காலச் சூழலில் உடல்நலத்தைக் கெடுக்கும் முதல் காரணியாக நாம் செய்யும் பணி நிலைமைக் காணப்படுகிறது எனவும் அது படைப்பாற்றலுக்கான தடையாகவும் உள்ளதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு விஷயத்தைப் பல கோணத்தில் சிந்தித்தால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படுவோம். ஆனால் சிலர் ஒரு விஷயத்தை ஒரே கோணத்தில் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். இது இவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரவிடாமல் தடுக்கும் காரணியாகும்.
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தேவையாக அனைத்துத் தகவல்களையும் திரட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் சிக்கலைத் தீர்க்க இயலாமல் மனச் சோர்வினை ஏற்படுத்திவிடும்.
தனக்குள் தோன்றும் சிந்தனையை வெளிப்படுத்த முனையும் போது ஏதாகினும் தடை ஏற்பட்டால் அப்படியே நிறுத்திவிடும் மனப்போக்குச் சிலருக்கு உள்ளது. ஒரு செயலை முடிக்க வேண்டும் என்ற விடாமுயற்சி இன்றி இருப்பதும் ஒரு தடையாகும்.
ஒரு செயலில் சிக்கலைத் தீர்ப்பதில் ஈடுபாடு இல்லாமல் காணப்படுவர். அவ்வாறு இருப்பின் அவர்களிடம் படைப்பாற்றல் வெளித்தோன்றாது.
ஒருவர் தனக்குள் இருக்கும் ஆற்றலை குறைவாகவே மதிப்பிடுவர். இதனைத் தாழ்வு மனப்பான்மை என்றும் கூறுவர். அவ்வாறு இருத்தல் படைப்பாக்கச் சிந்தனைக்கான தடைக்கல்லாகும்.
ஒரு சிக்கலைப் பற்றி ஆராயாது முன்கூட்டியே முடிவெடுப்பர். இப்படி இருப்பவர்களை முந்தரிக் கொட்டை, அவசரக் குடுக்கை என்று வழக்கத்தில் கூறுவதுண்டு. இந்நிலையில் இருப்பவர்கள் உண்மை நிலையை ஆராய்வதில்லை. மற்றவர்களின் கருத்துகளையும் செவிமடுப்பதில்லை. இந்நிலையும் படைப்பாற்றலைத் தடுப்பதாகும்.
ஒரு சிக்கலைப் பற்றி ஆராயாது முன்கூட்டியே முடிவெடுப்பர். இப்படி இருப்பவர்களை முந்தரிக் கொட்டை, அவசரக் குடுக்கை என்று வழக்கத்தில் கூறுவதுண்டு. இந்நிலையில் இருப்பவர்கள் உண்மை நிலையை ஆராய்வதில்லை. மற்றவர்களின் கருத்துகளையும் செவிமடுப்பதில்லை. இந்நிலையும் படைப்பாற்றலைத் தடுப்பதாகும்.
ஒருவர் வாழும் சமூகம் சார்ந்தும் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்தும் ஏற்படும் தடைகளாகும். தற்காலச் சூழலில் இந்நிலை மாறிக்கொண்டு வருகிறது எனலாம்.
படைப்பாக்கத்திறன் மிகுதியாகப் பெற்றுள்ளவர்களிடம் சில பண்புகள் (Indicators of creative talent) உள்ளன. அவற்றின் வெளிப்பாடே அவர்களைப் படைப்பாற்றல் மிக்கவர்களாகக் காட்டுகிறது. இப்பண்புகள் இத்தகையோரிடம் காணப்படும் ஆளுமைப் பண்புகளாகும்.
குழந்தைகளிடம் வெளிப்படும் படைப்பாற்றல் திறனை முறைப்படி வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களுடையதாகும். ஏனெனில் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம்பிக்கை அவர்களைத் தனித்தன்மை உடையவர்களாக உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சான்றாக, 1993இல் வெளிவந்து உலகைக் கலக்கிய ஜுராஸிக் பார்க்கை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வளர்ந்த விதம் சுவாரசியமானது. இளம் வயதிலேயே அவர் திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். அதற்கான படைப்பாற்றல் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. அத்திறனைத் தூண்டிவிட்டு அவரை உற்சாகப்படுத்தி அவரைப் பரிணமிக்க வைத்த பெருமை அவரது தாயான லீயையே (Leah) சேரும்.
இளம் வயதில் ஸ்பீல்பெர்க் பாய் ஸ்கவுட்டில் (Boy Scout) சேர்ந்திருந்தார். ஒரு குட்டித் திரைப்படத்தைத் தயாரித்து அந்தத் தயாரிப்பிற்கான மெரிட் பாட்ஜைப் (Merit Badge) பெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 12 தான்!
சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தாயாரிடம் சென்று தன் ஆசையைக் கூறினார். “வெளியே போய் விளையாடு. வேண்டாத வேலையில் எல்லாம் ஈடுபடாதே” என்று விரட்டவில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தினார். அதற்கான உதவிகளையும் செய்தார்; ஏன் அவரே நடிக்கவும் செய்தார்! ஸ்பீல்பெர்க் ஒரு திகில் படத்தை எடுக்க விரும்பினார். அதில் ஒரு காட்சியில் சமையலறை காபினெட்டிலிருந்து ரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வர வேண்டும். அம்மாவிடம் காட்சியைப் பற்றிக் கூறினார். உடனே அவர் கடைவீதிக்குச் சென்று 30 செர்ரி கேன்களை வாங்கி வந்தார். அதை சமையலறை காபினெட்டில் ஊற்றி ரத்தம் பொங்கி வரும் காட்சியை எடுக்கச்செய்தார். படம் வெற்றியானது. ஸ்டீவனுக்கு மெரிட் பேட்ஜும் கிடைத்தது.
ஸ்டீவனின் தாய் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர் தன் மகனுக்காக வீட்டையே ஸ்டூடியோவாக மாற்ற அனுமதியளித்தார். அவ்வப்பொழுது ஸ்டீவன் எடுக்கும் காட்சிகளுக்குத் தேவைப்படும் பின்னணி அமைப்புகள், பாத்திரங்களின் உடைகளை அவரே தயார் செய்து கொடுத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பு எனில் அதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்படி அனைத்து விதத்திலும் அவரின் தாயார் அளித்த ஊக்கமும் உறுதுணையுமே அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
இவ்வாறாகக் குழந்தையின் படைப்பாற்றலை வளர்க்கப் பெற்றோர் அவர்களை ஊக்குவித்து அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இயல்பான உணர்வுகளைத் தூண்டித் துலங்கச் செய்யும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியருக்கு உரியதாகும். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனைக் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்துதல் வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் சிந்தனைத் திறன் என்பது மிகவும் அலாதியானது; பரந்துபட்டது. அதை நாம் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. ஆனால், பல நேரங்களில் குழந்தைகளின் சிந்தனைத் திறனை நாம் குறைத்தே எடை போடுகிறோம். அவர்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான் என நாமாகவே நினைத்துக்கொண்டு அதற்கேற்றார்போல் நடந்துகொள்கிறோம். ஆனால், பல நேரங்களில் நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டு குழந்தைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.
சான்றாக, தொடக்கநிலை வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது. நேர்மையை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொருவரும் கதை கூற வேண்டும். வீட்டில் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மறுநாள் வகுப்பில் அதை நீங்கள் சொல்ல வேண்டும். ஆனால், அனைவருக்கும் தெரிந்த கதைகளைக் கூறக்கூடாது என்ற விதிமுறையுடன் அப்போட்டி அறிவிக்கப்பட்டது.
அடுத்த நாள், வகுப்பில் முகத்தில் உற்சாகத்துடன் குழந்தைகள் காத்திருந்தனர். எல்லா குழந்தைகளும் தாங்கள் தெரிந்துகொண்டு வந்த கதையை உடனே சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்ததை அவர்களது முகத்தில் தெரிந்தது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு கதையைச் சொல்லிக் கைதட்டல் வாங்கிச் சென்றனர். ஒரு குழந்தை சொன்ன கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கதை இதுதான்...
ஓர் ஊரில், ஓர் அரசன் இருந்தான். அவன் தன் நாட்டைச் சேர்ந்த சிறு குழந்தைகள், படிக்கும் பிள்ளைகள் எந்த அளவுக்கு நேர்மையானவர்களாக இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள நினைத்தான். அதற்காக, பள்ளிக் குழந்தைகளை அழைத்து ஆளுக்கு ஒரு விதையைக் கையில் கொடுத்தான். இதை வீட்டில் உள்ள தொட்டியில் போட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள். இரு வாரத்திற்குப் யாருடைய செடி நன்றாக வளர்ந்திருக்கிறதோ, உரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்தான். குழந்தைகள் அனைவரும் வரிசையில் நின்று ஆளுக்கு ஒரு விதையை வாங்கிச் சென்றனர்.
அரசன் கூறிய நாளும் வந்தது. அவரவர்கள் தங்கள் தொட்டியை எடுத்து வந்தனர். அவர்கள், கொண்டு வந்த தொட்டியில் விதைகள் முளைத்திருந்தன. ஒரு சில தொட்டிகளில் மிகவும் நன்றாகவே செடிகள் வளர்ந்திருந்தன. ஒவ்வொரு தொட்டியாகப் பார்த்துக்கொண்டே வந்த மன்னன் ஒரு தொட்டியின் அருகில் நின்றான். அந்தத் தொட்டியில் வெறும் மண்ணைத் தவிர எதுவுமே இல்லை.
அந்தக் குழந்தையிடம், 'ஏன் விதை முளைக்கவில்லை? என்று கேட்டான் அரசன். அதற்கு அந்தக் குழந்தை, 'அரசே! நீங்கள் கொடுத்த விதையை நான் இந்தத் தொட்டியில் போட்டுத் தண்ணீர் ஊற்றி மிகக் கவனமாகப் பராமரித்து வந்தேன். ஆனால், இவ்வளவு நாள்களாகியும் விதை முளைக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை தரமில்லாத விதையாக இருக்கலாம்! என்று கூறியது. அரசர் கொடுத்த விதை தரமற்றது என்று அவரிடமே கூறுகிறதே, என்ன ஆகப் போகிறதோ? எனப் பலரும் அஞ்சினர்.
ஆனால், அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அரசன் அந்தக் குழந்தைக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினான். 'இந்தப் பிள்ளைதான் உண்மையிலேயே நேர்மையான குழந்தை!' என்றும் அறிவித்தான். அமைச்சர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'எப்படி மன்னா..? எதை வைத்து இந்தப் பிள்ளையை நேர்மையாளர் எனத் தேர்ந்தெடுத்தீர்கள்?' எனக் கேட்டனர். அதற்கு அரசன் கூறினான், 'அமைச்சர்களே! நான் கொடுத்த விதைகள் அனைத்தும் நன்கு வறுக்கப்பட்ட விதைகள். அவை ஒருபோதும் முளைக்காது. நான் கொடுத்த விதை வளரவில்லை என்று தெரிந்தவுடன், பரிசுக்கு ஆசைப்பட்டு வேறு ஏதோ ஒரு விதையைப் போட்டு செடியை வளர்த்துள்ளனர். ஆனால், இந்தக் குழந்தையோ நான் கொடுத்த விதையை மட்டும் போட்டு வளர்த்திருக்கிறது. அதனை அப்படியே எடுத்து வந்து உண்மையை எடுத்துக் கூறியிருக்கிறது. எனவே இந்தக் குழந்தைதான் நேர்மையான குழந்தை!' என்றான். அதனைக் கேட்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இப்படிக் கூறி கதையை முடித்தான் அந்த மாணவன்.
அனைவரும் கைகளைத்தட்டி அந்த மாணவனை ஊக்கப்படுத்தினர். ஆனால், ஒரே ஒரு குழந்தை மட்டும் கைதட்டாமல் எழுந்து நின்றது. அக்குழந்தை கேட்ட வினாக்கள் அனைவரையும் வியக்க வைத்தது. அக்குழந்தை தொடர்ந்தது. நேர்மையைச் சோதிக்க நினைத்த அரசன், நல்ல விதைகளைத்தானே கொடுத்திருக்க வேண்டும். அவர் ஏன் வறுத்த விதைகளைக் கொடுத்து எல்லாரையும் ஏமாற்றினார். நல்ல விதைகளைக் கொடுக்காமல் ஏமாற்றிய அரசன் எப்படி நேர்மையாளராக இருக்க முடியும்? என்று வினாக்களை அடுக்கிக்கொண்டே போனது.
இந்நிகழ்வு, குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஒருபோதும் குறைத்து எடை போடக் கூடாது என்பதை உணர்த்துகிறது. இன்றைய குழந்தைகளின் சிந்திக்கும் திறன் கணிக்க முடியாத அளவிற்கு நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாளும் அவர்கள் பார்க்கக்கூடியவை, அவர்களைத் தாமாகவே சிந்திக்கத் தூண்டுகின்றன. குழந்தைகளைச் சுற்றி நடக்கக்கூடிய சிறு சிறு நிகழ்வுகள்கூட அவர்களின் சிந்தனையைத் தூண்டுகின்றன. அதனால்தான் இந்தத் தலைமுறை குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாக, படைப்பாளிகளாக உருவெடுக்க முடிகிறது.
குழந்தைகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி அவர்களை மிகுந்த சிரத்தை எடுத்துக் கவனிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்ற எண்ணத்தை அவர்கள் மனத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சொல்வதை குழந்தைகள் கேட்பார்கள். எதிர்காலத்தில் சிறந்த குடிமகன்களாக அவர்கள் உருவாகவும் அது வழி வகுக்கும்.
மாணவர்களிடம் படைப்பாற்றலை வளர்த்தால் கீழ்க்காணும் பயன்கள் விளையும் என்பதில் ஐயமில்லை. படைப்பாற்றலின் மூலம் மாணவர்,