தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
1.6 தொகுப்புரை
தொகுப்புரை
புதிதாக ஒன்றனைத் தனித்தன்மையுடன் உருவாக்குவதே படைப்பாற்றலாகும். படைப்பாற்றல் என்பது ஓர் உயர்நிலைத் திறனாகும். புதுமை விளைந்தால் அது படைப்பாற்றலின் செயலாக நாம் கொள்ளலாம். ஒரு சிக்கலைப் புதிய முறையில் தீர்ப்பது மற்றும் ஓர் இலக்கை எவருக்கும் தோன்றாத ஒரு புதிய வழியைப் பின்பற்றி அடைவது போன்றவை படைப்பாற்றலின் வெளிப்பாடுகளாகும். இவ்வாறு புதிய பொருள் கொள்வதில் ஒருங்கிணைப்பு, பாகுபாடு, புதிய உத்திகள், புதுக்கருத்துகள் ஆகியன யாவும் இணைந்து காணப்படும். உண்மையான படைப்பாற்றலின் விளைவுகள், சமூகப் பயனை நோக்கியும், மக்களிடையே நல்வாழ்வினை தோற்றுவிப்பதாகவும் அமையும். ஆனால் எந்தப் புதிய கருத்தும் சமூகப் பயனுடையது என்று முன்கூட்டியே முடிவாகக் கூறுவது இயலாது. எனவே குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டி, படைப்பாற்றலை வெளிக்கொணரச் செய்வது ஆசிரியர்களின் கடமையாகும். இவ்வலகில் படைப்பாற்றலில் குழந்தைகள் சிறந்து விளங்க ஆசிரியர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.