முகப்பு

அலகு - 4

மொழியின் நடைமுறைப் பயன்பாடு

இந்த அலகு என்ன சொல்கிறது?

குழந்தைகள் எழுதுதல் மற்றும் பேசுதலில் சிறந்து விளங்க குறிப்பெடுத்தல், விரித்து எழுதுதல், நிறுத்தல் குறிகளைப் பயன்படுத்தல், சமூக ஊடகங்களின் மொழி பயன்பாடு, பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலை வளர்த்தல், இலக்கிய நயம் பாரட்டுதல் ஆகியவற்றைக் குறித்து ஆசிரியர் விரிவாக அறிந்துகொள்ள இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • குறிப்பெடுத்து எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.
  • விரித்து எழுதுவதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
  • மொழிசார்ந்த படைப்பாற்றலில் நிறுத்தற்குறிகளின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளலாம்.
  • சமூக ஊடகங்களில் சுருக்கமொழிப் பயன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளலாம்
  • மாணவர்களின் படைப்பாற்றலில் பேச்சாற்றல் உத்திகளை உணரலாம்.
  • எழுத்தாற்றலை அறியும் முறையினைத் தெரிந்துகொண்டு விளக்கலாம்.
  • ஒரு கவிதையைப் படித்துப் பார்த்து இலக்கிய நயத்தினை விளக்கக் கற்றுக்கொள்ளலாம்.