தன்மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
4.6 தொகுப்புரை
தொகுப்புரை
உயர்நிலைத் திறன்களாகக் குறுப்பெடுத்தலும் விரிவாக்கமும், நிறுத்தற் குறிகள் சுருக்கிமொழிப் பயன்பாடு, பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் இலக்கிய நயம் பாராட்டல், ஆகியவை இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாணவர்களும் கற்க வேண்டிய சில திறன்களைக் காலத்திற்கேற்ப விளக்கப்பட்டுள்ளது. மொழியாட்சியில் நிறுத்தற் குறிகளும் எழுத்து, சொற்களைப் போன்ற பொருட் பொதிவுக்கும் வெளிப்பாட்டுக்கும் துணையாகின்றன. எனவே, மொழித் திறனில் நிறுத்தற் குறிகள் பற்றிய அறிவும் இன்றியமையாததாகிறது. எழுத்து சொல், சொற்றொடர் போன்றே நிறுத்தற் குறிகளும் மொழிக்கூறுகளாகக் கருதப்பட்டு, மொழித்திறன் வளர்க்கப்படும் தொடக்க நிலையிலேயே முறையாகக் கற்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு கற்று பேச்சாற்றலிலும் எழுத்தாற்றலிலும் மாணவர்கள் சிறந்து விளங்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.