முகப்பு

4.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

மொழி தகவல் தொடர்புக்கு மட்டும்தான் என்ற சிந்தனைப் போக்கு மாறி, அதன் பன்முக ஆளுமையினைக் கல்வியாளர்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர். மக்களின் வாழ்க்கையை எதிரொளிக்கும் கண்ணாடி ’மொழி’ என்பதையும் தாண்டி மொழியானது வாழ்க்கை பயன்பாட்டை மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கையினை வரையறுக்க துணையாகின்றது. சிந்தனையைக் கிளறுதல், நினைவாற்றலுக்குத் துணையாதல், பல பணிகளைச் செய்யும் திறனை மேம்படுத்துதல். கூர்மையான சிந்தனைக்குரிய ஊடகமாதல், பிற மொழிகள் கற்றலை வலுப்படுத்துதல், பிற பாடப்பொருள் கற்றலுக்கு ஊடகமாதல், இணைப்புத் திறனை மிகுதியாக்கல் போன்ற பல்வேறு நடைமுறைப் பயன்பாடுகள் மொழியால் பெறப்படுகின்றன. மொழியால் பெறப்படும் பயன்கள் அத்தனையும், அதில் பன்னெடுங்காலமாய் வளர்ந்தும் செம்மைப்பட்டும் வருகின்ற இலக்கியங்களாலும் பெறப்படுகின்றன. இவற்றுள் இன்றியமையாத சிலவற்றை இவ்வலகில், 1. குறிப்பெடுத்தலும் விரிவாக்கமும், 2. சுருக்கமொழிப் பயன்பாடு, 3. இலக்கிய நயம் பாராட்டல், 4. பேச்சும் எழுத்தும், 5. நிறுத்தல் குறிகள் ஆகிய தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.