முகப்பு

அலகு - 2

மொழிப்பாடத்தில் படைப்பாற்றல் திறன்

இந்த அலகு என்ன சொல்கிறது?

மொழிவழிப் படைப்பாற்றலை வளர்க்க மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்றல் நிலைகளைக் குறித்தும், மாணவர்கள் கவிதை, கதை, கட்டுரை, கடிதம் ஆகியவற்றை உருவாக்க பயிற்சி ஆசிரியர் கற்பிக்க வேண்டியவற்றையும் இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மொழிப்பாடத்தில் படைப்பாற்றலின் தன்மையை அறியலாம்.
  • மாணவர்களின் படைப்பாற்றலை வகுப்பறையில் வெளிக்கொணரலாம்.
  • கதை, கவிதை எழுதும் திறனை மேம்படுத்தலாம்.
  • சிறுகதை புனையும் தன்மையை வெளிப்படுத்தலாம்.
  • கட்டுரை, கடிதம் எழுதும் ஆற்றலை வெளிப்படுத்தலாம்.