முகப்பு

2.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

படைப்பாற்றல் என்பது பிறவியிலேயே அமைவது; இயற்கையானது; ஒருவரிடம் கற்பித்தலால் உருவாக்கப்படுவதன்று என்றுநிலை இருந்தது. அந்நிலைமாறி ‘சித்திரமும் கைப்பழக்கமும் செந்தமிழும் நா பழக்கம்’ என்னும் பழமொழிக்கேற்ப படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ள இயலும். அவ்வகையில் கற்பித்தல் மூலமாகச் சூழ்நிலையை உருவாக்கித் தருவதன் மூலமாகவும், வழிகாட்டுதல் மூலமாகவும் படைப்பாற்றலை உருவாக்க முடியும். என்பதில் மொழியாசிரியரின் பங்கு முதன்மையானது ஆகும். இவ்வலகில் மொழியாசிரியர் தம் மாணவர்களிடம் எவ்வாறெல்லாம் படைப்பாற்றலை வளர்க்கலாம். படைப்பாற்றல் பற்றிய சிந்தனைகள் என்னென்ன முறைகளில் வெளிப்படுத்தப்படும் என்பனவற்றையெல்லாம் காணலாம்.