தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
அ. அன்பு ஆ. இன்பம் |
2.6 தொகுப்புரை
தொகுப்புரை
பொதுவாகப் படைப்பு என்பது, அனுபவப் பகிர்வு எனலாம். படைப்பாளியின் அனுபவத்தில் எழும் படைப்புகளுள், கதை மனம் சார்ந்தது. கற்பனை சார்ந்தது. அனுபவத்தை நிகழ்த்திக் காட்டுவது. கவிதை, உயர்ந்த அனுபவத்தின் அழகிய தெளிவு எனலாம். ஒரு கருத்தைத் தெளிவாக விளக்குவது கட்டுரை. கடிதம், சிறந்த உரைநடையில் நல்ல சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதாகும். நாடகம், உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி. கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதாகும். இவ்வகையான படைப்பிலக்கியங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டால், ஓர் இலக்கிய வடிவத்தினை, அதன் இயல்பு மாறாமல் மற்றொரு வடிவமாக மாற்றுவது எளிதாகிவிடும். இதற்கான கற்பித்தல் பயிற்சிகளை ஆசிரியர் முறையாக மேற்கொள்ளல் வேண்டும். மாணவர்களிடம் பயிற்சியும் முயற்சியும் இருப்பின் சிறந்த படைப்பாளர்களாவர் என்பதில் ஐயமில்லை.