முகப்பு |
மான் (கலை, இரலை, உழை, நவ்வி) |
2. பாலை |
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
||
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
||
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
||
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
||
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
||
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
||
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
||
காலொடு பட்ட மாரி |
||
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! | உரை |
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! | உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
61. குறிஞ்சி |
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
||
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
||
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
||
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
||
5 |
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
||
'படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
||
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
||
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
||
10 |
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. | உரை |
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! | உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
84. பாலை |
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
||
திதலை அல்குலும் பல பாராட்டி, |
||
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
||
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
||
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
||
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
||
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
||
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
||
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
||
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! | உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
111. நெய்தல் |
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
||
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
||
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
||
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
||
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
||
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
||
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
||
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
||
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. | உரை |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
113. பாலை |
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
||
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
||
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
||
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
||
5 |
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் |
||
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
||
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
||
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
||
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
||
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! | உரை | |
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
121. முல்லை |
விதையர் கொன்ற முதையல் பூழி, |
||
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் |
||
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, |
||
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் |
||
5 |
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
|
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு |
||
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர |
||
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா |
||
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் |
||
10 |
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
|
எல் விருந்து அயரும் மனைவி |
||
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! | உரை | |
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
|
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் | ||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
256. பாலை |
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, |
||
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; |
||
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, |
||
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; |
||
5 |
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
|
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, |
||
கார் பெயல் செய்த காமர் காலை, |
||
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை |
||
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த |
||
10 |
கண் கவர் வரி நிழல் வதியும் |
|
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. | உரை | |
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. | உரை | |
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்
|
274. பாலை |
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, |
||
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, |
||
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் |
||
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் |
||
5 |
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
|
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் |
||
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு |
||
இரும் புலி வழங்கும் சோலை, |
||
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? | உரை | |
தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்
|
311. நெய்தல் |
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
||
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
||
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
||
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
||
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
||
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
||
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
||
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
||
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. | உரை | |
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? | உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|