பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

105

கட

கடா

- ஆட்டுக் கடா 479

கடுகு

- விரைவில் 369

கண்டகம்

- முள் 570

கணி

- சோதிடன் 238

கணையம்

- காவற்காடு 28

கதுவல்

- பற்றுதல் 516

கப்பணம்

-

இரும்பால செய்த நெருஞ்சி முள்போன்ற ஆயுதம்

360

கப்பு

- கிளை 116

கபோலதலம்

- கன்னம் 143

கயம்

- பொய்கை, யானை 1

கயிரவம்

- ஆம்பல் [காப்பு]  

கரகம்

-

கர (கை) கம் (நீர்). கையில் ஏந்திய கமண்டலம்

668

கலம்

- மரக்கலம் 617

கலன்

- “கலன்” எனும் ஒலி 299

கலை

- ஆடை 45

கலை நிரம்பிய வடிவு

- 16 கலையும் நிரம்பப்பெற்ற முழு மதி 269

கவடு

- கிளை 496

கவல்

- கவலை, அச்சம் 661

களபம்

- இளயானை 22

கறங்க

- சுழல 222

கனை

- ஒலிக்கும் 14

கனகவரை

- மேரு 456

காணும்

-

முன்னிலைப் பன்மையைக் குறித்து வரும் ஓர் அசை

664

காதுதல்

- அடித்தல் 666

காயம்

- வெங்காயம்; பெருங்காயம் 674

கால்

- வில் நுனி   5,278
முறை 567

காலம்

- நஞ்சு 377

காவணம்

- பந்தல் 135

கான்

- மணம் [காப்பு]  

கிம்புரி

- யானைத் தந்தத்தில் அணியும் பூண 367

கிளர்தல்

- எழுதல் 404

குஞ்சி

- ஆண்களின் மயிர் 4

குடில

- நேர்மையற்ற, சுருண்ட, வளைந்த 112

குணலை

-

வீராவேசத்தால் கைகொட்டி ஆடும் கூத்து

288