பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

106

New Page 1

குதிரையின் நடை

- தாரை   251
பவுரி 252
வாளி 255

குந்தம்

- சூலம் போன்றது 488,489

குப்புற்று

- கடந்து, பயந்து 460

குமரி

- காளி 237

குருத்து

- யானைத் தந்தம் 137

குலக்கொடி

-

குலம் வளர்வதற்காகக் கொண்ட கொடி
போன்றவள், பட்ட மகிஷி

265

குவடு

- சிகரம் 540,42

குழிசி

- பானை, மிடா 663

குளப்படி

-

குதிரைகளுடைய குளம்பின் அடிப் பகுதி

666

குளிகை

- மாத்திரை 157

குறைகள்

-

துணிக்கப்படுவதால் குறையாயுள்ள ஆயுதங்கள்

492

கூகை

- ஆந்தை 218

கூத்துக்களின் வகை

- துணங்கை 692
சித்து நடை 146

கூர் அமர்

- கூர்மையான போர் 469

கூறு

- பகுதி, துண்டு 207

கூளி

- பூதம்  479
கூட்டம் 637

கேழல்

- பன்றி 205

கைதவம்

- வஞ்சனை 197

கைம்மாயம்

- திருட்டு, வஞ்சனை 661

கொடிறு

- கன்னம் 676

கொடு

- வளைந்த 230

கொத்து

- உற்றார், உறவினர், கூட்டம் 112

கொப்பு

- கொம்பு 107

கொழு

- நுனி உள்ள நீண்ட இரும்பு 350

கொளுவல்

- அகப்படுத்தல், கொளுத்துதல் 557

கொற்றி

- ஒரு வகைப் பேய் 664

கோகனகம்

- தாமரை 16

கோடு

- படை 209

கோயில்

- திருவரங்கம் 16

கோல்

- அம்பு 666

கோலி

- வளைத்து 463

சகதண்டம்

- உருண்டை வடிவமான உலகம் 283

சதமகன்

- நூறு யாகங்கள் செய்த இந்திரன் 597,604

சந்து

- சந்தனம் 18

சம்பரன்

- ஓர் அரக்கன பாகவதம் 7.8.29; 494