Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
ஏனியட் எவ்வாறு ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’யை ஒத்துள்ளது?
‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’ போலவே ஏனியடின் கதைப்பின்னலும் ட்ரோஜன் போரைப் பின்னணியாகக் கொண்டது. ட்ரோஜன் போருக்குப் பின்னர் வீடு திரும்பத் துடிக்கும் யுலிஸஸ் கடவுளரின் கோபத்தால் 12 ஆண்டுகள் கடலிலும் நிலத்திலும் அலையும் கதையைச் சொல்கிறது ஒடிசி. ஏனியடின் முதல் ஆறு காண்டங்களில் ஜுனோவின் கோபத்திற்கு ஆளாகிய ட்ரோஜன்கள் இத்தாலியை அடைய முடியாமல் பல ஆண்டுகள் கடலில் அலைகின்றனர். ஏனியட்டின் இரண்டாவது ஆறு காண்டங்கள் இலியட்டை ஒத்து அமைந்துள்ளன. ‘இலியட்’ ட்ரோஜன் போரை விரிவாக விவரிக்கிறது. ஏனியடின் கடைசி ஆறு காண்டங்கள் இத்தாலியில் ட்ரோஜன்கள் நிகழ்த்திய போரைப் பற்றிக் கூறுகிறது.