Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
சோர்வுற்ற ஏனியாஸை அவனது தந்தை எவ்வாறு தேற்றுகிறார்?
சோர்வுற்ற ஏனியாஸின் முன் அவனது தந்தை வானத்தில் தோன்றுகிறார். ஏனியாஸ் இத்தாலியை அடையும் முன் பாதாள லோகத்தை அடைந்து, தன்னைத் தேடிக் காண வேண்டும் என்று கூறுகிறார். பாதாள உலகின் வழியே சொர்க்கத்தை வந்தடைகிறான் ஏனியாஸ். அங்கு அவனது தந்தை அஞ்சிசேஸ் உரோமின் சிறந்த எதிர்காலத்தை அவனுக்குக் காட்டுகிறார். வருங்காலத்தில் தோன்றவிருக்கும் பேரரசர்களின் அணிவகுப்பையும் அவர்கள் புரியவிருக்கும் மகத்தான செயல்களையும் ஏனியாஸ் காண்கிறான். நம்பிக்கையோடு ஏனியாஸ் பூலோகம் திரும்புகிறான்.