Primary tabs
-
பாடம் - 1
A05121 குகைக் கல்வெட்டுத் தமிழ்
தமிழகத்தில் குகைக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள், அவை எழுதப்பட்டதற்கான காரணம், அவைகளைப் பற்றிய ஆய்வு முயற்சிகள் ஆகியன விளக்கப்படுகின்றன.
குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழே என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
குகைக் கல்வெட்டுகளின் எழுத்து வடிவம் இந்தியா முழுவதிலும் வழக்கிலிருந்த பிராமி வடிவமே என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
குகைக் கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் ஒலி அமைப்பு, சொல் அமைப்பு, தொடர்அமைப்பு ஆகியவை எவ்வாறு அமைந்துள்ளன என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
கிறித்து பிறப்பதற்கு முந்தைய மிகப்பழங்காலத்துத் தமிழ் எழுத்து வடிவ ஆவணமாகக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
-
பழங்கால இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கும் எழுத்துவடிவாயிருந்த பிராமி வரிவடிவமே தமிழ் மொழிக்கும் வரிவடிவமாயிருந்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளலாம். மற்றபடி, கல்வெட்டுகளின் மொழி தமிழே எனவும் உணரலாம்.
-
கல்வெட்டுகளின் நோக்கம் கற்படுக்கை அமைத்தோர், கல்வெட்டு எழுதியோர் யார், யாருக்காக அவை படைக்கப்பட்டன என்பதைத் தெரிவிப்பதாக இருந்தாலும், இவை பழந்தமிழின் எழுத்து, சொல், தொடர் அமைப்புகளின் சில கூறுகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன எனக் காணலாம்.
-
பழங்கால மக்களின் பேச்சுத் தமிழ் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இக்கல்வெட்டுகளின் மொழியைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடிகிறது.
-