தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05122 தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்

 • பாடம் - 2
  A05122 தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தொல்காப்பியர் காலத் தமிழில் ஒலிகள் எவ்வாறு பாகுபடுத்தப்பட்டிருந்தன என்பதை இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.

  ஒலிகளின் ஒலிப்புமுறை பற்றிய ஆய்வை மிகப்பழங்காலத்திலேயே தொல்காப்பியர் நிகழ்த்தியிருக்கும் சிறப்பும், அவர் கூறும் ஒலிப்பு முறைகள் இக்கால மொழியியல் ஆய்வு உண்மைகளோடு பொருந்திக் காணப்படும் சிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.

  எழுத்துகளின் வரிவடிவம் பற்றிய தொல்காப்பியர் காலக் கருத்துகள் இப்பாடத்தில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. எழுத்துகள் சொற்களின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் முறை ஒழுங்குகள் பற்றிய தொல்காப்பியரின் வரையறைகளை இப்பாடம் எடுத்துக் காட்டுகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மொழியின் அமைப்பை முறையாகப் புரிந்துகொள்ளக் காலந்தோறும் அதில் நேர்ந்துள்ள வளர்ச்சி, மாற்றங்களைக் கூர்ந்து கவனிப்பது இன்றியமையாதது. அவ்வகையில் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் எழுத்தொலிகளின் ஒலிவடிவமும் வரிவடிவமும் எவ்வெவ்வாறு அமைந்திருந்தன என்பதை இப்பாடத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
  • குற்றியலுகரம் நுண்ணொலியாகிய ஆய்தம் ஆகிய சார்பொலிகளின் தன்மைகளையும், ஐ, ஒள எனும் கூட்டொலிகளின் தன்மைகளையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.
  • தொல்காப்பியர் காலத்தமிழ் வரிவடிவம் அப்போதே நல்ல செப்பமான அமைப்புடையதாக இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.
  • ஒலியசை முறை என மொழிநூலார் கூறும் எழுத்துகளின் முறைவைப்புக்குத் தொல்காப்பியர் தெளிவான வரையறைகளை வகுத்ததன் மூலம், இன்றுவரை தமிழின் ஒலிமுறையைக் கட்டுவிடாமல் காக்கப் பேருதவி புரிந்திருக்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2019 18:12:11(இந்திய நேரம்)