தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05123 தொல்காப்பியர் காலத் தமிழ் - உருபனியல்

  • பாடம் - 3
    A05123 தொல்காப்பியர் காலத் தமிழ் - உருபனியல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தொல்காப்பியர் காலத் தமிழ் உருபனியல் பற்றி விளக்கிக் கூறுகிறது. தொல்காப்பியர் சொல்லை எவ்வாறு பாகுபடுத்திக் கூறுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் காலத் தமிழில் வேற்றுமைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைத் தெளிவுறுத்துகிறது.

    வினைச்சொல்லின் அமைப்பையும் வகைகளையும் விளக்குகிறது.

    இடைச்சொல், உரிச்சொற்களின் அமைப்பையும் பயனையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • உருபன் என்ற மொழியியல் கலைச்சொல்லின் பொருளைத் தமிழ் இலக்கணத்தோடு தொடர்புப்படுத்திப் புரிந்து கொள்ளலாம்.
    • தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய இருதிணைப் பொதுப்பெயர்கள், பதிலிடு பெயர்கள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ளலாம்.
    • சுட்டுப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக வழங்கத் தொடங்கிய உண்மையை அறியலாம்.
    • அஃறிணையில் ஒருமைப் பெயர், கள் விகுதியில்லாமல் பன்மையும் உணர்த்தும் முறை தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருவதைக் கண்டு கொள்ளலாம்.
    • தமிழ் வினைச்சொல் பல இலக்கணக் கூறுகளை உணர்த்தி நிற்பது எனும் உண்மையை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2019 18:13:27(இந்திய நேரம்)