தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05124 தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்

  • பாடம் - 4
    A05124 தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தொல்காப்பியர் தொடரியலுக்கு எனத் தனியே அதிகாரம் வகுக்கவில்லை எனினும் சொல்லதிகாரத்திலேயே தொடரியல் இலக்கணத்தைக் கூறியுள்ள உண்மை எடுத்துக்காட்டப்படுகிறது. தொடர்களில் எழுவாய் - பயனிலை இயைபு எவ்வெவ்வாறு அமைகிறது என விளக்கப்படுகிறது. தொடர்களில் சொற்களின் வரன்முறை எவ்வெவ்வாறு அமையும் எனப் புலப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காட்டும் பல்வேறு தொடர் வகைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தொல்காப்பியர் காலத் தமிழ்த் தொடர்களில் திணை, பால், எண், இடம் ஆகிய இயைபுகள் பிழைபடாது அமைந்துள்ளன என்பதனை உணரலாம்.

    • ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்த் தொடர்களின் இயைபு கெடாமல் நீடித்து வருவதற்குத் தொல்காப்பிய இலக்கணமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    • நெகிழ்ச்சியான தொடர் அமைப்புக் காரணமாக, சொல் வரிசையில் மாற்றம் செய்தாலும் பொருள் மாறாதிருக்கும் தமிழ்மொழியின் இயல்பைப் புரிந்து கொள்ளலாம்.

    • அடைமொழிகள், இயற்பெயர், சிறப்புப்பெயர் போன்றவை தொடர்களில் அமையும் முறைகள் தொல்காப்பியர் காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்ததை உணரலாம்.

    • தொடரில் பொருள் மயக்கம் நேரும் சூழ்நிலைகளில் அம்மயக்கத்தைத் தவிர்க்கும் முறைகள் பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2019 18:14:33(இந்திய நேரம்)