தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 6
  A05126 சங்கம் மருவிய காலத் தமிழ்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சங்கம் மருவிய காலத் தமிழ் ஒலியனியலில் நேர்ந்த மாற்றங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் விளக்குகிறது.

  மூவிடப் பெயர்களில் புதியனவாகத் தோன்றியவற்றைச் சுட்டிக் காட்டுகிறது.

  சங்கம் மருவிய காலத் தமிழில் பயன்படுத்தப்பட்ட புதிய பால் காட்டும் விகுதிகள் பற்றிச் சொல்கிறது.

  வேற்றுமை உருபுகளில் புதிய சேர்க்கைகள் பற்றிக் கூறுகிறது.

  சங்கம் மருவிய காலத்து எச்ச வடிவங்கள் பற்றி விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மொழிமுதல் எழுத்துகள், இடைநிலை மெய்ம்மயக்கம் ஆகியவற்றில் சங்க காலத் தமிழிலிருந்து சங்கம் மருவிய காலத்தமிழ் என்னென்ன மாற்றங்களைப் பெற்றுள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

  • இடப்பெயர்கள் காலத்துக்குக் காலம் பெரும் மாற்றத்துக்கு உள்ளாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  • கள் எனும் அஃறிணை விகுதி காலப்போக்கில் உயர்திணை உணர்த்துவதற்குப் பயன்பட்ட படிமுறை வளர்ச்சியை விளங்கிக் கொள்ளலாம்.

  • சங்கம் மருவிய காலத்தமிழ் அனைத்துக் கூறுகளிலும் சங்கத் தமிழிலிருந்து பெரிதும் மாறவில்லை என்பதைக் கண்டுகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:01:31(இந்திய நேரம்)