Primary tabs
-
6.3 உருபனியல் - பெயர்ச்சொல்
பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை சங்கம் மருவிய காலத் தமிழ், சங்க காலத் தமிழிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்று வளர்ந்துள்ளதனைக் காணலாம். மூவிடப் பெயர்களில் சில புதிய வடிவங்கள் முதன்முதலாக வழக்கிற்கு வருகின்றன. சுட்டு எழுத்துகளின் அடியாகப் பெயரடைகள், வினையடைகள் சில தோன்றி வழங்குகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியின் ஆட்சி சங்க காலத்தைவிடப் பல நிலைகளில் பெருகிக் காணப்படுகின்றது. வேற்றுமையில், உருபுகளின் வடிவத்தில் சில மாறுதல்கள், புதிய உருபுகளின் வரவு என்ற வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.
சங்கம் மருவிய காலத் தமிழில் மூவிடப் பெயர்களில் சில புதிய வடிவங்கள் வந்து வழங்குகின்றன.
இடம்எண்பெயர் வடிவம்உருபேற்கத் திரிந்த வடிவம்தன்மைஒருமையான், நான்என்பன்மையாம், நாம்எம், நம்யாங்கள்*எங்கள்*முன்னிலைஒருமைநீநின், உன்பன்மைநீயிர், நீர்நும், உம், நுங்கள்*படர்க்கைஒருமைதான்தன்பன்மைதாம்தம், தங்கள்*(*உடுக்குறி இட்டவை புதிய வடிவங்கள்)
- தன்மை இடப்பெயர்
- முன்னிலை இடப்பெயர்
- படர்க்கை இடப்பெயர்
தன்மை ஒருமை இடப்பெயர்களில் பழைய வடிவமான யான் என்பதே அதிகமாக வழங்குகிறது. ஏறத்தாழ 120 இடங்களில் வழங்குகிறது. நான் என்பது சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் எட்டு இடங்களில் மட்டும் பயில்கிறது.
யாங்கள் என்ற தன்மைப் பன்மை வடிவம் முதன்முதலாக வந்து வழங்குகிறது. யாம் என்பது உயர்வு ஒருமைப் பெயராகவும் வழங்குகிறது.
இவ்வடியில், பாண்டியன் கண்ணகியிடம் தன் உயர்வு தோன்றத் தன்னை யாம் எனக் கூறிக் கொள்கிறான். ஆகவே, பன்மையைத் தெளிவாக உணர்த்த யாம் என்பதினின்று வேறுபட்ட வேறொரு வடிவம் தேவைப்பட்டது. இதனால் யாங்கள் என்ற புதிய வடிவம் சங்கம் மருவிய காலத்தில் வந்தது.
யாங்கள் என்பது வேற்றுமை உருபேற்கும் போது, எங்கள் என வருகிறது. இது முதன்முதலாக மணிமேகலையில் மட்டும் ஓரிடத்தில் வருகிறது.
முன்னிலைப் பன்மையில் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களில் நுங்கள் என்பது புதிதாக வந்து வழங்குகிறது. இது சிலப்பதிகாரத்தில் மட்டும் ஓரிடத்தில் வழங்குகிறது.
(சிலம்பு. பதிகம் ; 45)
தான், தாம் ஆகிய இரண்டும் படர்க்கை இடப்பெயர்கள். இவை சங்கம் மருவிய கால இலக்கியங்களில் மூன்று நிலைகளில் வழங்குகின்றன.
தான் நோக்கி மெல்ல நகும் (குறள். 1094)
(தான் = தலைவியைக் குறித்தது ; தாம் = காதலர்களைக் குறித்தது.)
கோவலன் தான் போன பின்னர் (சிலம்பு. 7; 52:7)
பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட (சிலம்பு. 20 ; 74)
அவன், அவள், அவர், அது, அவை என்பன போன்ற சுட்டுப் பெயர்கள் படர்க்கை இடப்பெயர்களாகப் பயன்படுவது மிகுதியாயிற்று. தான், தாம் என்பன அசைகளாகவும் வருவதை மேலே கண்டோம். சங்கம் மருவிய காலத்தில் அவள், அது எனும் சுட்டுப் பெயர்களும் அசைகளாக வரத் தொடங்கின.
6.3.3 சுட்டுப் பெயரடைகளும் வினையடைகளும்
அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயரடைகள் சங்கம் மருவிய காலத் தமிழில் காணப்படுகின்றன. இவை சங்க காலத் தமிழில் காணப்படவில்லை.
அப்படி, இப்படி என்னும் இரண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்களில் சுட்டு வினையடைகளாக வழங்குகின்றன. இவையும் சங்க காலத் தமிழில் காணப்படவில்லை.
ஆளன் என்பதை ஆண்பால் விகுதியாகவும் ஆட்டி என்பதைப் பெண்பால் விகுதியாகவும் ஆளர் என்பதைப் பலர்பால் விகுதியாகவும் கொண்ட உயர்திணைப் பெயர்ச் சொற்கள் சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இப் புதுமையான விகுதிகள் சங்க காலத்திலேயே பயிலத் தொடங்கிவிட்டாலும், இவற்றின் ஆட்சி சங்கம் மருவிய காலத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. (இவை தனியே பொருள்தரும் சொற்களே ஆயினும் விகுதிகள் போலப் பெயர்ப்பகுதிகளோடு சேர்த்து வழங்கப்பட்டன.)
காரர் என்ற புதிய விகுதியும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வருகிறது. வடமொழியில் உள்ள கார் என்ற விகுதியும் தமிழில் உள்ள அர் என்ற பலர்பால் விகுதியும் இணைந்து காரர் என்ற விகுதி தோன்றியது.
6.3.5 கள் விகுதியின் செயல்பாடுகள்
தொல்காப்பியர் கள் விகுதியை அஃறிணைப் பெயர்ச்சொற்களில் பன்மை உணர்த்துவதற்கு உரியதாக மட்டுமே குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் கள் விகுதி, அஃறிணைப் பன்மை உணர்த்தியதோடு, அர் என்ற பலர்பால் விகுதியோடு சேர்ந்து அர்கள் என நின்று உயர்திணைப் பன்மை உணர்த்தவும் வந்தது. சங்கம் மருவிய காலத் தமிழில் கள் விகுதி பெயர்ச்சொற்களில் ஐவகையாகச் செயல்படுகிறது.
இவ்விருவகையும் சங்கம் மருவிய காலத்திற்கு முன்பிருந்தே வழங்கியவை. இனி வருபவை சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய புதிய வழக்குகள்.
இத்தொடர்களில் பெண்கள், செட்டிகள் ஆகிய சொற்களில் கள் விகுதி உயர்திணைப் பன்மை விகுதியாக வருகிறது.
இவ்வரியில் வரும் நோன்பிகள், அடிகள் ஆகிய சொற்கள் கோவலனைக் குறிக்கின்றன. இங்குக் கள் விகுதி உயர்வு ஒருமை விகுதியாக வருகிறது. மேலும் கவுந்தியடிகள் (சிலம்பு. 11;166) அறவண அடிகள் (மணி. 12; 1) ஆகிய சொற்களிலும் கள் உயர்வு ஒருமை விகுதியாக வருகிறது.
மேலே கூறியவற்றை நோக்கும்போது, கள் விகுதி சங்கம் மருவிய காலத் தமிழின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகிப்பதை அறியலாம்.
இயற்பெயர்கள், ஆர் என்னும் பலர்பால் விகுதியைச் சிறப்பு விகுதியாகப் பெற்று, உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன. சங்க காலத்தில் கலித்தொகையில் சாமனார் என்ற ஒரு சொல் மட்டும் ஆர் விகுதி பெற்று உயர்வு ஒருமைப் பெயராக வழங்கியது. சங்கம் மருவிய காலத்தில் இத்தகைய சொற்களின் வழக்கு மிகுதியாகக் காணப்படுகிறது.
தொல்காப்பியர் கூறியுள்ள வேற்றுமை உருபுகள் சங்க காலத்தில் எத்தகைய மாறுதலும் பெறாமல் வழங்கின. சங்கம் மருவிய காலத்தில், சில வேற்றுமை உருபுகள் வடிவத்தில் சிறு மாறுதல் பெற்று வழங்குகின்றன. சில வேற்றுமைகளுக்கான பொருளை உணர்த்தப் புதிய சொல்லுருபுகள் வழங்குகின்றன. (சொல்லுருபு = தனியே பொருள்தரும் ஒரு சொல்லே உருபாக வருவது)
(திமில் கொண்டு = படகால்)