Primary tabs
- 2.2 நாட்டுப்புறவியல் - பகுப்பும் பண்பும்
இந்திய அளவிலும், தமிழகத்திலும் நாட்டுப்புறவியலை, கால அடிப்படையில் பகுத்துள்ளனர். நாட்டுப்புற இலக்கியத்திலும் கலைகளிலும் காணப்படும் பொதுப்பண்புகளையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
இலக்கியம் காலத்தின் - சமுதாயத்தின் - கண்ணாடி என்றால், அவ்விலக்கியத்தின் நிலைத்த திறத்தினைக் காலப் பகுப்பின் வழி வகைப்பாடு செய்து தெளிவு பெற முடியும். இவ்வாறு மனித வாழ்வு காலத்தின் வழிச் செயல்படுகிறது என்றால் ஏற்க இயலும்.
- இந்திய நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) பண்டைக்காலம் (Ancient Period)
2) தற்காலத்தின் தொடக்கக் காலம் (Early Modern Period)
3) தற்காலம் (Modern Period)என்று முக்காலங்களாகப் பகுத்து, இந்திய நாட்டு எல்லைக்குள் உள்ள மாநிலங்களின் படைப்புகளைத் திறனாய்வு செய்கின்றனர்.
- தமிழக நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) சேகரிப்புக் காலம் (1871 - 1959)
2) ஆய்வின் தொடக்கக் காலம் (1960 - 1969)
3) ஆய்வுகளின் வளர்ச்சிக் காலம் (1970)என்று பகுத்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
நாட்டுப்புற வழக்காறு என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற இலக்கியம், கலைகள் என்பனவாகும். இவ்விரு பகுதிகளும் சில முக்கியமான பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன. அவையாவன:
1) நிலைத்த தன்மை உடையன
2) நிலையற்ற தன்மையும் உண்டு
3) இடையிலே நிறுத்தி வைக்கப்படுதலுண்டு
4) தள்ளி வைத்தல் என்பது உண்டு
5) மக்கள் விரும்பும் பண்பின
6) சுவையும், அழகியல் கூறும் கொண்டவை
7) சமூக அடையாளங்களைக் கொண்டவை
8) பார்வையாளன், படிப்பாளரின் மாற்றத்தையும் ஏற்கும் பண்பின.இவ்வாறு நாட்டுப்புறவியல் என்பது மக்களின் படைப்பாக, மக்களுக்குச் சுவையூட்டும் படைப்பாக, மக்களின் வழியே நிகழ்த்தும் படைப்பாக விளங்கி வருகின்றது. இவ்விலக்கியத்தின் சிறப்பினைச் சான்றுகள் வழி அறியலாம்.