Primary tabs
-
தெருக்கூத்து
தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம் தெருக்கூத்து
ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால்
தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது. ஒரு கதையைப் பாடியும் ஆடியும்
உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
சிலபகுதிகளில் தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை
இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால் கட்டைக் கூத்து எனவும்
வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய ஒப்பனை இல்லாமலும்
தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
தெருக்கூத்தில் எடுத்துரைக்கப்படும் கதைப் பொருளிற்கேற்ப
ஒப்பனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.ஆண்களே பெண் வேடமிட்டு
நடிக்கின்றனர். கட்டியக்காரன் என்ற நகைச்சுவைப் பாத்திரம்
தெருக்கூத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
வடார்க்காடு, தென்னார்க்காடு, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டப்
பகுதிகளில் நடைபெறும் திரௌபதையம்மன் விழாக்களின் போது
வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து இடம்பெற்று
வருகிறது. இதில் பெரும்பாலும் மகாபாரதக் கதைச் சம்பவங்களே
கூத்தாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
( தெருக்கூத்து )
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக