தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-பொம்மலாட்டம்

  • பொம்மலாட்டம்

    மரத்தால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை இயக்கிக் காட்டி
    நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் ஆகும். தோற்பாவைக் கூத்திலிருந்து
    இது வேறுபட்டதாகும். கட்டை பொம்மைக்கூத்து, கட்டை பொம்மை
    நாடகம் என்ற பெயரிலும் இது வழங்கப்படும். கும்பகோணம்,
    மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதிகளில் பொம்மலாட்ட சபா என்ற
    பெயரில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    பொம்மைகளின்     உறுப்புகள்     கயிற்றால்     தனித்தனியே
    இணைக்கப்பட்டுக் கலைஞர்களால் உரையாடலுக்கேற்ப இயக்கிக்
    காட்டப்படுகின்றன. கரகாட்டம், காவடியாட்டம், நெல்குத்துதல்,
    கத்திச்சண்டை போடுதல் போன்றவை பொம்மையைக் கொண்டு
    செய்துகாட்டும் போது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர்.
    இராமாயணக்     கதைகளே     பொம்மலாட்டத்தில்     பெரிதும்
    எடுத்துரைக்கப் படுகின்றன.

    திரைப்படம் என்ற சாதனம் வருவதற்கு முன்பு தோற்பாவைக்
    கூத்தும் பொம்மலாட்டமுமே அரங்கக் கலையாக மக்கள் முன்
    நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி இவற்றின்
    தாக்கத்தால் இக்கலைகள் இன்று மறைந்து வருகின்றன.


    ( பொம்மலாட்டம் )
    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:44:57(இந்திய நேரம்)