Primary tabs
-
கணியான் கூத்து
கணியான் என்னும் இனத்தாரால் மட்டுமே இக்கூத்து
நிகழ்த்தப்படுவதால் கணியான் கூத்து என வழங்கப்படுகிறது. கணியான்
கூத்தில் மகுடம் என்னும் தோலிசைக் கருவி சிறப்பிடம் பெறுவதால்
மகுடாட்டம், மகுடக்கச்சேரி எனவும் சுட்டப்படுவதுண்டு.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில்
உள்ள சுடலைமாடன் கோயில் வழிபாடுகளில் சடங்குக் கலையாகக்
கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது.
மகுடச்சத்தம் கேட்டாலொழிய மாடன்பூசை கொள்வானோ என்ற
வழக்காறு சுடலைமாடன் வழிபாட்டிற்கும் கணியான் கூத்திற்கும் உள்ள
உறவை உணர்த்தும்.
தலைமைப்பாடகர் ஒருவர் (அண்ணாவி என அழைக்கப்படுவார்).
மகுடம் வாசிப்போர் இருவர், ஆட்டம் ஆடும் பெண்கள் இருவர்
(ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவர்), ஒரு பின்பாட்டுக்காரர்
என்று ஆறுபேர் கணியான் கூத்தில் இடம்பெறுவர்.